என்றென்றும் நன்றியுடன்

என்றென்றும் நன்றியுடன், கே.எஸ். ரவிக்குமார், ஜே.டி.ஜீவா, நாகரத்னா பதிப்பகம், 3ஏ, டாக்டர் ராம் தெரு, நெல்வயல் நகர், பெரம்பூர், சென்னை 11, பக். 96, விலை 70ரூ- To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-711-3.html

திரைப்பட இயக்குநர் கே.எஸ். ரவிக்குமாரின் பன்முகங்களையும் மிகச் சுவையாக வெளிப்படுத்தும் நூல். அவரிடம் துணை இயக்குநராகப் பணிபுரியும் நூலாசிரியர் அந்த அனுபவஙங்களிலிருந்து இந்நூலை எழுதியிருக்கிறார். பல வெற்றிப் படங்களை இயக்கியவர் என்பதற்கு அப்பால் கே.எஸ். ரவிக்குமார் என்ற மனிதரின் நல்ல பண்புகளைச் சித்தரிக்கும் பல சுவையான அனுபவங்கள் இடம் பெற்றிருக்கின்றன. ஒருமுறை கே.எஸ். ரவிக்குமாரை அழைத்துச் செல்ல கார் வராதபோது, ரவிக்குமார் கார்லதான் போவானா? ஏன் ஆட்டோல போக மாட்டானா? ரவிக்குமார் பத்து படையப்பா, பத்து தெனாலி பண்ணாலும் பழசை மறக்க மாட்டான் என்று ஆட்டோவில் எந்த ஒரு பந்தாவும் இல்லாமல் ஏறிச் சென்ற சம்பவம் ஒன்றே போதும், அவருடைய எளிமையைப் பற்றி தெரிந்து கொள்ள. இயக்குநரான தனக்குத் தரப்படும் உணவே தன்னிடம் பணியாற்றும் பிற கலைஞர்களுக்கும் தரப்பட வேண்டும் என்ற கே.எஸ். ரவிகுமாரின் கண்டிப்பான விருப்பம், தனது உதவி இயக்குநர்களுக்கு துன்பம் நேர்கையில் உடனே அவர்களுக்கு உதவும் பண்பு, தசாவதாரம் படத்துக்கு செட் போடும் போது அது முழுமையாகும் வரை ஓர் இரவு முழுவதும் தூங்காமல் மிகப் பொறுப்புடன் இருந்த அவருடைய தொழில்பக்தி அதிகம் ஃபிலிமை வீணாக்காமல் அவர் படம் எடுக்கும் நேர்த்தி என கே.எஸ். ரவிக்குமாரின் பல்வேறுபட்ட பண்புகளை, திறமைகளை இந்நூல் மிக அழகாகச் சொல்கிறது. சாதனைகள் படைக்க நினைக்கும் யாரும் பல சோதனைகளைக் கடந்துதான் வரவேண்டும் என்பதை உணர்த்தும் நூல். நன்றி: தினமணி, 17/6/2013.  

—-

 

திருமுறை ஆசிரியர்கள் 27 பேர் வரலாறு, அருட்சுடர் பதிப்பகம், 60, கண்ணகி சாலை, ஈரோடு 638001, விலை 75ரூ.

பன்னிரு திருமுறைகளை எழுதிய அருளாசிரியர்கள் 27 பேர். இவர்கள் மூன்றாம் நூற்றாண்டுக்கும் 12ம் நூற்றாண்டுக்கும் இடையே வாழ்ந்தவர்கள். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி நாயனார், மாணிக்கவாசகர், திருமூலர், காரைக்கால் அம்மையார், பட்டினத்தடிகள் சேக்கிழார் உள்பட 27 அருளாசிரியர்களின் வாழ்க்கை வரலாறுகள் கொண்ட நூல்7 இது. பக்திரசம் சொட்ட, அழகிய தமிழில் நூலை எழுதியிருப்பவர் ஈரோடு தங்க.விசுவநாதன். நன்றி: தினத்தந்தி, 28/11/2012,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *