எப்போது அழியும் இந்த உலகம்
எப்போது அழியும் இந்த உலகம்?, ராஜ் சிவா, உயிர்மை பதிப்பகம், 11/29, சுப்பிரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை 18. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-806-7.html
டிசம்பர் 21ஐ மறந்துவிட்டு எல்லோரும் ஒரு சினிமாவைப் பார்க்க முடியுமா. முடியாதா என்ற கவலையில் அடுத்த மாதம் இறங்குவார்கள் என்று தெரிந்திருந்தால், மாயன் காலண்டர் பரபரப்பை உருவாக்கியவர்கள் தற்கொலை செய்துகொண்டிருப்பார்கள். அந்த அளவு பரபரப்பை உருவாக்கிய ஒரு நாளுக்குப் பின்னே என்ன இருந்தது? இந்த பரபரப்பை ஒட்டி இந்த உலகத்தில் என்னவெல்லாம் நடந்தன? விரிவாகவும் சுவாரசியமாகவும் ஆராய்கிறது ராஜ் சிவாவின் இந்த நூல். இது உலக சமுதாயமே சேர்ந்து எழுதிய ஒரு மர்மக் கதை. இந்தக் கதை முடிந்துவிட்டதா? உலகம் உண்மையிலேயே இந்த அழிவிலிருந்து தப்பிவிட்டதா? உலகம் அழிந்து போவதற்கு இன்னும் என்னென்ன சாத்தியங்கள் இருக்கின்றன. மாயன் கலாசாரம் இந்த உலகிலிருந்து எப்படி மறைந்து போனது? அவர்கள் உண்மையில் அதீத அறிவு பெற்ற மானுட சமூகமாக இருந்தார்களா? இப்படி எத்தனையோ விஷயங்களைப் பேசும் இந்த நூல், சமீபத்தில் தமிழில் வெளிவந்த மிக சுவாரசியமான புத்தகம் என்ற உணர்வை ஏற்படுத்துகிறது.
—-
பின் தொடரும் பிறிதொரு நிழல், பனிமுகில் கா. கதிர்வேல், வைகறை பதிப்பகம், 6, மெயின்ரோடு, திண்டுக்கல் 1, பக்கங்கள் 152, விலை 40ரூ.
கட்டுரை வடிவில் சிறுகதைகளக வடித்துள்ளார் ஆசிரியர். ஆரம்பத்தில் ஒரு கட்டுரையாகத் தொடங்கி, முடிவில் அது கதையாய் முடிவது நல்ல உத்தி. விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்க்கைச் சூழல், மாற்றத்திற்கான அவர்களின் ஏக்கங்கள், அவர்கள் ஏமாறிப்போகும் ஏமாற்றங்கள், என்ன போராடினாலும் தோற்றுக் கொண்டே போகும் அவர்களின் நிலைப்பாடு இவைகளைத்தான் இத்தொகுப்பு முழுதும் கட்டுரை வடிவில் சிறுகதைகளாக யாத்துள்ளார் ஆசிரியர். நல்ல முயற்சி.
—-
பாரதி வயது 39, ஜுலியஸ் இதயகுமார், அரும்பு பதிப்பகம், 49 டெய்லர்ஸ் ரோடு, சென்னை 10, பக்கங்கள் 116,விலை 60ரூ.
39 வருடங்களே வாழ்ந்த பாரதியன் வாழ்வை 39 சிறு சிறு அத்தியாயங்களில் கூறியிருக்கிறார். பாரதியின் வாழ்க்கையை அறிந்து கொள்ள விரும்புகிறவர்கள் அல்லது பாரதியைப் படிக்கத் தொடங்கும் புதிய ஆர்வலர்களுக்கு, இச்சிறிய நூல் பெரிய அளவில் உதவும். பாரதியின் வாழ்வில் எந்தப் பகுதியையும் விடாமல் இச்சிறிய நூலின் ஆசிரியர் பதிவு செய்திருப்பது சிறப்பு. – இரா. மணிகண்டன். நன்றி: குமுதம் 09-01-2013.