எம்.எஸ்.சுவாமிநாதன் வளங்குன்றா வேளாண்மை இயக்கத்தின் தலைமகன்
எம்.எஸ்.சுவாமிநாதன் வளங்குன்றா வேளாண்மை இயக்கத்தின் தலைமகன், முனைவர் என். பரசுராமன், மதிநிலையம், விலை 200ரூ.
இந்தியாவில் இன்றைய இளைஞர்களின் பார்வை வேளாண்மை பக்கம் திரும்பி இருக்கிறது என்றால் அதற்கு முழு முதல் காரணம் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன்தான். உலகில் தலைசிறந்த வேளாண் விஞ்ஞானியான எம்.எஸ். சுவாமிநாதன் தன்னை தேடி வந்த ஐ.பி.எஸ். பணியை வேண்டாம் என்று நிராகரித்துவிட்டு, விவசாய வளர்ச்சியே தன் வாழ்க்கையின் குறிக்கோள் என்ற வகையில் அவர் விடும் ஒவ்வொரு மூச்சிலும் விவசாயம் விவசாயம் என்றே வாழ்ந்துகொண்டு இருக்கிறார். அவரது வாழ்க்கை வரலாற்றை ஆய்வு செய்து சென்னை பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிலையத்தின் முதன்மை விஞ்ஞானி என். பரசுராமன், வேளாண் விஞ்ஞானியின் வாழ்க்கை வரலாற்றை மிக உன்னதமாக எழுதி உள்ளார். அற்புதமான படங்களுடன் எழுதப்பட்டுள்ள இந்த வாழ்க்கை வரலாற்று நூல் நிச்சயமாக வேளாண் முன்னேற்றத்துக்கு ஒரு உந்துகோலாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. விவசாயிகள் கைகளில் மட்டுமல்லாமல் பள்ளிக்கூடங்கள், பல்கலைக்கழகங்களில் இருக்க வேண்டிய நூல் இது. நன்றி: தினத்தந்தி, 9/9/2015.
—-
சொல்லில் அடங்காத உலகம், பா. ராமமூர்த்தி, பாவை பப்ளிகேஷன்ஸ், விலை 90ரூ.
5 கண்டங்கள், 24 நாடுகள் என உலகம் முழுவதும் பயணப்பட்டு, இந்தியா உள்பட அனைத்துப் பகுதி வாழ்வியலை அழகாகப் பதிவு செய்த பராக்கா என்ற ஆவணப்படத்தின் ஒவ்வொரு காட்சியையும் விளக்கும் இந்த நூல், உலகைச் சுற்றி வந்த அனுபவத்தைத் தருகிறது. நன்றி: தினத்தந்தி, 9/9/2015.