ஐந்திரன் படைப்புகள்

ஐந்திரன் படைப்புகள், லெனின், விஜி பதிப்பகம், டி5, 4சி, சிவ இளங்கோ சாலை, ஜவகர் நகர், சென்னை 82, விலை 100ரூ.

கவிஞர் ஐந்திரன் (வெ. முத்துலிங்கம்) எழுதிய கவிதைகள், கட்டுரைகள், கதைகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. இவற்றுள் கவிதைகள்தான் அதிகம். ரசிக்கத்தக்க விதத்தில் கவிதைகளை எழுதியுள்ளார் ஐந்திரன்.  

—-

 

வாழ்வை வளமாக்கும் தன்னம்பிக்கை, பசுமைக்குமார், நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், 105, ஜானி ஜான்கான் சாலை, ராயப்பேட்டை, சென்னை 14, விலை 65ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-862-6.html

வாழ்க்கையில் சாதிப்பதற்கும் தன்னம்பிக்கை அவசியம் என்பதை தனி தலைப்புகளில் வடிவமைத்து இருக்கிறார் ஆசிரியர். ஒவ்வொரு கட்டுரையையும் உதாரணத்துடன் விளக்கியுள்ளதால் வாசிப்பவர்களிடம் ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது. மாணவர்கள் உள்பட அனைத்து தரப்பினரும் படிக்க வேண்டிய நூல் இது.  

—-

 

மணிவாசகரின் திருவாசகக் கதைகள், அருட்சுடர் பதிப்பகம், 60, கண்ணகி சாலை, ஈரோடு 638001, விலை 80ரூ.

திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார் என்பது திருவாசகத்தின் பெருமையை உணர்த்தும் சொல். திருவாசகத்தை அருளிய மாணிக்கவாசகரின் வரலாறு, திருவாசகத்தில் கூறப்பட்டுள்ள சிவனின் கருணையும், இரக்கமும் நிறைந்த கதைகளை பக்தர்கள் அறிந்த இறை சிந்தனை அடையும்விதமாக இந்நூல் வெளிவந்துள்ளது. நன்றி: தினத்தந்தி. ஐந்திரன் படைப்புகள்

Leave a Reply

Your email address will not be published.