ஓடாத குதிரைகள்
ஓடாத குதிரைகள், கற்பக வித்யா பதிப்பகம், சென்னை, விலை 70ரூ.
நாடகங்கள் நம் கண்முன் நடப்பவை, ஆனால் வானொலி நாடகங்கள் நம் செவிகளின் வழியே பாய்ந்து, காட்சிகளை நம் மனக்கண் முன் கொண்டு வந்து நிறுத்துபவை. ஆகவேதான் வானொலி நாடகம் என்பது, காற்றில் வரையப்படுகிற ஓவியம் என்று வர்ணிக்கப்படுகிறது. இதை எழுதுவதற்கு மிகுந்த ஆற்றல் வேண்டும். வானொலி அண்ணா என்று புகழ்பெற்ற என்.சி. ஞானப்பிரகாசம், வானொலி நாடகங்கள் எழுதுவதில் மிகுந்த ஆற்றலும், அனுபவமும் உள்ளவர். அதற்கு ஓடாத குதிரைகள் என்ற இந்த புத்தகத்தில் அடங்கியுள்ள 9 நாடகங்களும் சான்று பகர்கின்றன. நன்றி: தினத்தந்தி, 15/7/2015.
—-
எல்லாமே சில காலம்தான், மேனகா பதிப்பகம், சென்னை, விலை 125ரூ.
பல்வேறு தலைப்புகளில் 64 கவிதைகள் எழுதியுள்ளார் கவிஞர் ம. இரவிபாரதி. அன்னை என்ற தலைப்பில் எழுதியுள்ள முதல் கவிதையே நெஞ்சை நெகிழ வைக்கிறது. நன்றி: தினத்தந்தி, 15/7/2015.