கங்கை கொண்ட சோழன்
கங்கை கொண்ட சோழன், பாலகுமாரன், விசா பப்ளிக்கேஷன்ஸ், நான்கு பாகங்கள் சேர்த்து விலை 1630ரூ.
மிகப் பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்கி, மாமன்னராக விளங்கிய ராஜேந்திர சோழனின் வரலாற்றுப் பின்னணியில் மிக சுவாரசியமாக எழுதப் பெற்ற நாவல். சரித்திர நாவல் என்பது தகவல் களஞ்சியம் அல்ல. ஆய்வுக்கட்டுரை அல்ல. அது ஓர் உணர்வுப் பெருக்கு என்று கூறும் இந்த நாவலின் ஆசிரியர் பாலகுமாரன், தனது உணர்வுகளைத் திரட்டி, இந்த சிரித்திர நாவலைப் படைத்து இருக்கிறார். கப்பல்கள் கட்டும் திறன், கடற்பயணம், போர்க்களம் போன்றவற்றின் நுணுக்கங்களை உள்வாங்கி, அவற்றை இந்த நாவலில் அபப்டியே தந்து இருப்பதால் படிக்க விறுவிறுப்பாக இருக்கிறது. மன்னர் ராஜேந்திரனின் வரலாறு, அவரது போர்த்திறன், அவர் கட்டிய கோவில், கங்கை நீரை கொண்டுவந்து உருவாக்கிய குளம் ஆகிய வரலாற்றை அறிந்துகொள்ள இந்த நாவல் தூண்டுகோலாக இருக்கும் என்பதே எழுத்தாளர் பாலகுமாரனின் வெற்றி ஆகும். நன்றி: தினத்தந்தி, 13/8/2014.
—-
திருவாசகம், கற்பகம் புத்தகாலயம், சென்னை, விலை 160ரூ.
ஊனை உருக்கி உள்ளொளி பெருக்கி நம்மைத் தேனில் நனைய வைப்பவை மாணிக்க வாசகர் அருளிய திருவாசக்பபாடல்கள். இந்நூல் திருவருளை அடைவதற்கான திசைகாட்டி துன்பக் கடலிலிருந்து கரை ஏறுவதற்கான கலங்கரை விளக்கம், முக்தி உலகிற்கு அழைத்துச் செல்வதற்கான ராஜபாட்டை. இந்த அருள் நூலுக்கு மாணிக்க வாசகரின் உணர்வுகளை எல்லாம் பிரதிபலிக்கும்படியான வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து, நுட்பமான உரையைச் செப்பமான முறையில் எழுதியிருக்கிறார் கவிஞர் பத்மதேவன். உணர்ந்து படித்தால் பேரின்ப உச்சம் கிடைக்கும். நன்றி: தினத்தந்தி, 13/8/2014.