கடைசிக்கோடு

கடைசிக்கோடு, இந்தியாவின் வரைபடம் பிறந்த கதை, ரமணன், கவிதா வெளியீடு, விலை 80ரூ To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0002-187-6.html

பொறாமைப்படவைக்கும் ஒரு புத்தகம் நில அளவைத்துறை என்கிறார்கள் இன்றைக்கு சங்கிலிப் பிடித்து நூறு நூறு அடியாக இந்தத் தேசம் முழுவதையும் அளந்து வரைபடமாகத் தயாரித்தவர்கள் அந்த சர்வே துறையில் பிள்ளையார் சுழியிட்ட இரண்டு வெள்ளைக்கார அதிகாரிகள். 1802ஆம் ஆண்டில் சென்னை நகரத்து மெரினா கடற்கரையில் கேப்டன் வில்லியம் லாம்ப்டன் என்பவர் முதல் அளவைக் கோட்டை வரைந்து தொடங்கிய இந்தப் பணியை, டேராடூனில் கடைக்கோட்டை வரைந்து முடித்து வைத்தவர் மூன்றாவது சர்வேயர் ஜெனரலாகப் பணியாற்றிய கர்னல் ஜார்ஜ் எவரெஸ்ட். இடைப்பட்ட காலம் அறுபது ஆண்டுகள். இந்தப் பணியின்போதுதான் அதுவரை பெயர் சொல்லிக் குறிப்பிடாமலிருந்த இமாலயத்தின் மணி முடியான ஒரு மலைச்சிகரத்தையும் கண்டு அதன் உயரத்தை 29,002 அடி என்று கணக்கிட்டார்கள். ஜார்ஜ் எவரெஸ்ட் காலமான பிறகு இந்தப் பணியில் அடியெடுத்துக் கொடுத்த அந்த உயர் அதிகாரியின் பெயரையே அந்தச் சிகரத்துக்குச் சூட்டித் தங்கள் நன்றியைப் பதிவு செய்திருக்கிறார்கள். நல்லகாலம். முன்பே கண்டுபிடித்து எவரெஸ்ட் என்று அதற்குப் பொருத்தமாக நாமகரணம் செய்துவிட்டார்கள். முதலில் அளந்த தொலைவு மெரினா கடற்கரை அருகே இருந்த சிறு குன்றில் தொடங்கி பரங்கிமலை வரையிலான ஏழரை மைல் (12 கி.மு). இந்தத் தொலைவை அளந்து பதிவு செய்ய 57 நாட்களாகியிருக்கின்றன. நாற்பது சிறிய இரும்புச் சங்கிலிகள் கொண்ட 100 அடி நீள அளவு சங்கிலியை 400 முறைகள் பயன்படுத்த வேண்டியிருந்ததாம். இந்த நூலை எழுதுவதற்குச் செலவிட்ட உழைப்பில் ஒரு நாவல் எழுதிவிடலாம். அது பெயரையும் பொருளையும்கூடக் கொண்டுவந்து கொடுக்கும். ஆனால் புதுமையை விரும்புகிற ரமணனின் மனம் அதைச் செய்யாது என்று மாலன் முன்னுரையில் பாராட்டுகிறார். சத்தியமான வார்த்தைகள். -சுப்ரபாலன். நன்றி: கல்கி, 8/12/13.  

—-

 

பூம்புகார் பதிப்பகம் வழங்கும் தவத்திரு தனிநாயக அடிகளாரின் படைப்புகள், ஆங்கிலம் பாகம் 1, ஆங்கிலம் பாகம் 2, தமிழ், பூம்புகார் பதிப்பகம், 63, பிராட்வே, சென்னை 600108, பக். முறையே 800, 774, 408, விலை முறையே 400ரூ, 400ரூ. 200ரூ.

மூன்று நூல்களின் விலை ரூ. 1000. செப்டம்பர் 30 வரை சிறப்பு சலுகை விலையில் ரூ. 800க்கு கிடைக்கும். நூல்களை பதிவு தபாலில்/கூரியரில் அனுப்பி வைக்கிறோம். விவரங்கட்கு தொடர்பு கொள்ளவும். நன்றி: தினமணி கதிர், 8/9/2013.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *