கலங்கிய நதி
கலங்கிய நதி, பி.ஏ. கிருஷ்ணன், காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ், நாகர்கோவில், பக். 334, விலை 250ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-194-2.html
தமிழிலும் ஆங்கிலத்திலும் திறம்பட எழுதும் மிகச்சில இந்திய எழுத்தாளர்களில் ஒருவர் பி.ஏ.கிருஷ்ணன் முதல் நாவல் புலி நகக் கொன்றை. இந்த நூலை முதன் முதலில் ஆங்கிலத்தில் எழுதினார். அது பெங்குயின் வெளியீடாக 1998ல் வெளிவந்தது. அதன்பின் கலங்கிய நதி கிருஷ்ணணின் இரண்டாம் புதினம். இதையும் முதலில் தி மட்டி ரீவர் என்று ஆங்கிலித்தில் எழுதினார். அவரே இதைத் தமிழிலும் தந்திருக்கிறார். நாவலின் களம், தமிழகத்துக்கு வெளியே அசாம். கதைப்பாதத்திரங்களில் பலர், தமிழர் அல்லர். அரசு அதிகாரியான சந்திரன், அசாமில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட பொறியாளர் ஒருவரை மீட்கும் பணியில் ஈடுபடும்போது, சந்திக்கும் பலவிதமான மனிதர்களை இந்தப் புதினம் அறிமுகப்படுத்தும்விதம் அருமை. தமிழ் நாவலுக்குப் பல புதிய பரிமாணங்களைச் சேர்க்கிறார் கிருஷ்ணன்.
—-
தமிழ்நாட்டின் நீர் வளம் ஒரு பார்வை, ஆர். நல்லகண்ணு, வாலண்டினா பப்ளிகேஷன்ஸ், 21/10, லோகநாதன் நகர் 2ம் தெரு, சூளைமேடு, சென்னை 600094, பக். 152, விலை 100ரூ.
வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிககையால் மையத்து நாடுகளில் பயிர் செய்வோம் என்ற பாரதியின் கனவு, இன்றளவும் நிறைவேறவில்லை என்று ஆதங்கப்படும் நூலாசிரியர் உலகின் தலையாய பிரச்னையாக உருவாகி வரும் தண்ணீர் பிரச்னையை மையமாக வைத்து, பல்வேறு காலகட்டங்களில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு நூலிது. கங்கை காவிரி இணைப்பு, சர்.ஆர்தர் காட்டனின் திட்டம், கேப்டன் தஸ்தூரின் பூமாவைக் கால்வாய்த்திட்டம், சேது கங்கை இணைப்பு, காவிரி நீர்ப் பிரச்னை என, பலத் தலைப்புகளில் பயனுள்ள பல விஷயங்களை ஆய்வு செய்துள்ள நூலாசிரியர், தாமிரபரணியில் நடக்கும் மணல் கொள்ளையைத் தடுக்க, நதிகளைப் பாதுகாக்க, கிளையில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடுத்த வழக்கு அதன் வாதங்கள் வரை எடுத்தாண்டுள்ளார். தமிழக அரசும், மத்திய அரசும் விழிப்புடன் செயல்பட இத்தகைய நூல்கள் வரவேற்கப்பட வேண்டும். -பின்னலூரான். நன்றி: தினமலர், 8/9/13