கணினியின் அடிப்படை

கணினியின் அடிப்படை, ஜெ. வீரநாதன், வெளியிட்டோர்: பாலாஜி கணினி வரைகலைப் பயிலகம், 167, போலீஸ் கந்தசாமி வீதி, ஒலம்பஸ், இராமநாதபுரம், கோயம்புத்தூர் – 641045. விலை ரூ. 123

  கணினி நமது அடிப்படைத் தேவைகளின் ஒன்றாக மாறிவிட்டது. அதன் அடிப்படைகளைத் தெரிந்துகொண்டால் வயது வித்தியாசம் இல்லாமல் அனைவராலும் இதனை கையாளமுடியும். அறிமுக நிலையில் இருக்கும் அனைவருக்கும் ஏற்படும் சந்தேகங்களை 31 தலைப்புகளில் புரியும்படி விளக்கப்படங்களுடன் ஆசிரியர் விளக்கியுள்ளார். விண்டோஸின் சமீபத்திய பதிப்பான, பதிப்பு 7-ஐ மையமாக வைத்து புத்தகத்தை எழுதியுள்ளார். கணினி மட்டுமல்லாமல் அதனுடன் தொடர்புடைய ஸ்கேனர் மற்றும் பிரிண்டர் பற்றியும் சேர்த்து விளக்கியுள்ளது புத்தகத்தின் தனிச்சிறப்பாகும்.  

ஒரு திறனாளியின் பொறியியல் படைப்புகளும் பயன்பாடுகளும், பி. ஜெயராமன், வெளியிட்டோர்: ஜெயம் எண்டர்பிரைசஸ், 58. மோசஸ் சாலை (தாமரை சாலை), அய்யப்பா நகர், பம்மல், சென்னை – 75. விலை ரூ. 200

நவீன தொழில் நுட்பங்களுடன் வீடுகள் கட்டுவதற்கு வழிவகைகளைச் சொல்கிறார் நூலாசிரியர் பி. ஜெயராமன். பல்வேறு வீடுகளுக்கான மாதிரி வரைபடங்களும் இடம் பெற்றுள்ளன.

 

 

1008 விடுகதைகள், ஏ.சண்பகவள்ளி, வெளியீடு: டி.எஸ்.புத்தக மாளிகை, 15 ஜெய்சங்கர் தெரு, மேற்கு மாம்பலம், சென்னை – 33. விலை ரு. 63

சிந்திக்கத் தூண்டும் 1008 விடுகதைகளை தொகுத்து வழங்கி இருக்கிறார் புத்தக ஆசிரியர் ஏ.சண்பகவள்ளி. குழந்தைகளுக்கு பயனுள்ள நூல்.  

ராபர்ட் கிரீன் இங்கர்சால், வெளியிட்டோர்: பழனியப்பா பிரதர்ஸ், 25, பீட்டர்ஸ் சாலை, சென்னை – 14. விலை ரூ. 50

‘சக மனிதர்களை அன்புடன் விரும்பியவன் என்று என் கல்லறையில் எழுதுங்கள்’ என்று கூறிய இங்கர்சால், தூங்கிக் கிடந்த சமுதாயத்திற்கு புத்துயிர் அளித்த புதுமைவாதி. அவரது வாழ்க்கை வரலாற்றை சுவைபட தொகுத்தளித்துள்ளார், கள்ளிப்பட்டி க.குப்புசாமி.  

 

ஆண்டியிலிருந்து அரசன் வரை, ஜனார்த்தனன், மணிமேகலைப் பிரசுரம், 7, தணிகாசலம் சாலை, தி.நகர், சென்னை – 17. விலை ரூ. 65

46 சிறுகதைகள் அடங்கிய நூல். ரசித்து படிக்கும்படி உள்ளன.   நன்றி: தினத்தந்தி 12-12-12        

Leave a Reply

Your email address will not be published.