திராவிட இயக்கம் புனைவும், உண்மையும்

 

செம்மொழியும் சிவந்த ஈழமும், தஞ்சை இறையரசன், பாவை பப்ளிகேஷன்ஸ், 142, ஜானிஜான்கான் சாலை, ராயப்பேட்டை, சென்னை – 14. விலை ரூ. 60 To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-798-9.html

சிந்தனையைத் தூண்டும் 16 கட்டுரைகளைக் கொண்ட நூல், எல்லாக் கட்டுரைகளும் தமிழின் பெருமையைக் கூறி, தமிழ் உணர்வைத் தட்டி எழுப்புகின்றன. “சிவந்த ஈழம்” என்ற கட்டுரை, இலங்கைத் தமிழர்களின் துயரத்தைப் படம் பிடித்துக் காட்டுகிறது.  

 

ருத்ராட்சங்களின் மகிமைகள், குருப்ரியன், குஹப்பிரியன், கடலங்குடி பப்ளிகேஷன்ஸ், 38, நடேச அய்யர் தெரு, தி.நகர், சென்னை – 17. விலை ரூ. 40

சிவபக்தர்கள் அணிவது ருத்ராட்சம். அதற்குள்ள சக்திகளை இந்நூல் விளக்குகிறது. ருத்ராட்சங்களில் ஐந்து முகம், பதினொரு முகம், இருபது முகம் என்று பல வகை உள்ளன. எதற்கு, எந்த ருத்ராட்சத்தை அணிய வேண்டும் என்று விவரிக்கிறார்கள் நூலாசிரியர்கள் குருப்ரியன், குஹப்பிரியன்.  

 

திராவிட இயக்கம் புனைவும், உண்மையும், மலர்மன்னன், கிழக்கு பதிப்பகம், 57, பி.எம்.ஜி.காம்ப்ளக்ஸ், தெற்கு உஸ்மான் ரோடு, தி.நகர், சென்னை – 17. விலை ரூ. 135 To buy this Tamil book online – www.nhm.in/shop/978-81-8493-743-5.html

திராவிட இயக்கத்தை விமர்சிக்கும் நூல். ‘திராவிட’ என்ற சொல்லே சமஸ்கிருதம் என்று கூறுகிறார் ஆசிரியர். பழந்தமிழ் இலக்கண, இலக்கிய நூல் எதுவும், திராவிட என்ற சொல்லை பயன்படுத்தவில்லை என்றும் கூறுகிறார்.   நன்றி: தினத்தந்தி 12-12-12        

Leave a Reply

Your email address will not be published.