ஈழத்தமிழரும் நானும்
ஈழத்தமிழரும் நானும், சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம், பூங்கொடி பதிப்பகம், 14, சித்திரைக்குளம் மேற்கு வீதி, மைலாப்பூர், சென்னை – 4. விலை ரூ. 100 To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-799-0.html
சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம், இலங்கைத் தமிழர்கள் மீது அன்பு கொண்டவர். இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து, பல்வேறு சந்தர்ப்பங்களில் அவர் எழுதிய கட்டுரைகள் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன. பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக ம.பொ.சி. பலமுறை இலங்கை சென்று வந்துள்ளார். அதுபற்றிய விவரங்களும், இலங்கையில் அளித்த பேட்டிகளும் இதில் இடம்பெற்றுள்ளன. இலங்கைத் தமிழர் பிரச்சினை பற்றி பல புதிய தகவல்களைத் தரும் நூல் இது. ம.பொ.சி. எழுதிய “சிலப்பதிகார உரையாசிரியர்கள் சிறப்பு” என்ற நூலையும் பூங்கொடி பதிப்பகம் வெளியிட்டுள்ளது. சிலப்பதிகாரத்தின் சிறப்பை அறிய இந்நூல் உதவும். விலை ரூ. 55.
—
வேலு பேசறேன் தாயி!, எழுத்தாக்கம்: இரா.சரவணன், விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை – 2. விலை ரூ. 85 To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-798-8.html
திரைப்பட நகைச்சுவை நடிகர் வடிவேலு இதுவரை வெளிவராத அவரது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை அவரிடமிருந்து தொகுத்து இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. வடிவேலு தன் தாயுடன் பட்ட துன்பங்களை மிக தத்ரூபமாக, கண்கள் கலங்க வைக்கும் வகையில் சொல்கிறார். விபத்தில் சிக்கி பேச்சுத் திறன் இழந்த பெண்ணுக்கு அவரது நகைச்சுவைக் காட்சிகளை 10 நாட்கள் போட்டுக் காட்டி, அதன் மூலம் பேச்சு, சிரிப்பு வந்ததாம். தனக்கு இரண்டு தாய் எனக் குறிப்பிடும் அவர் ஒன்று பெற்ற தாய், இன்னொன்று மாமியார் என்கிறார். இப்படி பெண்களைப் போற்றும் வகையில் அனேக சம்பவங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. புத்தகம் முழுவதும் மதுரைத் தமிழிலேயே எழுதப்பட்டுள்ளது, ரசிக்க வைக்கிறது.
—
மனிதர் தேவர் நரகர், பிரபஞ்சன், புதிய தலைமுறை பதிப்பகம், 25ஏ, என்.பி.இன்டஸ்ட்ரியல் எஸ்டேட், ஈக்காட்டுத்தாங்கல், சென்னை – 32. விலை ரூ. 180
‘புதிய தலைமுறை’ வார இதழில் பிரசுரமான 45 கட்டுரைகளின் தொகுப்பு நூல். தான் ஒரு வாசகனாக, ஓர் எழுத்தாளனாக இருந்து மனிதர்களைப் பற்றிச் சேகரித்த அனுபவங்களைக் கொண்டு மனிதர்களாக, தேவர்களாக, நரகர்களாக சற்றே கற்பனை கலந்த நயத்தோடு படைத்திருக்கிறார், நூலாசிரியர் பிரபஞ்சன். ஒவ்வொரு மனிதரிடமிருந்து நாம் ஏதோ கற்கிறோம். அந்த மனிதர்களும் அவர்களிடமிருந்து நாம் கற்றதுமே வாழ்க்கை என்ற தொகுப்பாகிறது. இது அனைவருக்கும் பொதுவானது. இந்த வாழ்க்கை தொகுப்பு இளைய தலைமுறைக்கு இனிமையாகவும், எளிமையாகவும், பயனுள்ளதாகவும் இருக்க வேண்டும் என்ற வகையில் இந்த நூல் அமையப்பெற்றுள்ளது. நன்றி: தினத்தந்தி 12-12-12