கண்ணதாசன் பேட்டிகள்
கண்ணதாசன் பேட்டிகள், தொகுப்பாசிரியர் ஆர்.பி. சங்கரன், கண்ணதாசன் பதிப்பகம், சென்னை, விலை 80ரூ.
கவிஞர் கண்ணதாசன் அளித்த பேட்டிகள் அடங்கிய புத்தகம். 1971ல் எதிரும் புதிருமாக உள்ள புரமுகர்களை சந்திக்க வைத்து, அவர்களின் உரையாடலை “குமுதம்” வெளியிட்டது. அப்போது, கண்ணதாசனும், ‘‘சோ”வும் சந்தித்து உரையாடினார்கள். சூடும், சுவையும் நிறைந்த அந்த உரையாடல் இந்தப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. நன்றி: தினத்தந்தி, 11/3/2015.
—-
டார்வின் ஸ்கூல், ஆயிஷா இரா. நடராசன், புக் பார் சில்டர்ன், சென்னை, விலை 75ரூ.
மாந்திரீக எதார்த்த நாவல் என்பது கற்றுத் தேர்ந்த, பிராயம் வந்த பண்டிதர்களுக்கு மட்டுமே என்பதை மாற்றி சிறுவர்களுக்கான நூலாகும். பள்ளியை களமாகக் கொண்டு பரிணாமவியல், டார்வினின் இயற்கைத் தேர்வு கோட்பாடு என்பதையும், நம் காலத்து சுற்றுச்சூழல் பிரச்சினைகள், கரிசனங்கள் ஆகியவற்றையும் ஒரு ஒற்றைச் சதித்திரத்தின் வண்ணமயமான பரப்பிற்குள்ளேயே தீட்டித்தந்துள்ளார். நன்றி: தினத்தந்தி, 11/3/2015