கற்றாழை
கற்றாழை, சு. தமிழ்ச்செல்வி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை, பக். 438, விலை 335ரூ.
மதுப்பழக்கத்தினால் வாழ்க்கை சீரழிந்த ஒரு பெண், தன்னுடைய மகளுக்கும் அதுபோன்ற வாழ்க்கை அமைந்துவிடக்கூடாது என்று போராடுவதே இந்நாவல். படிக்க விரும்பியும் படிக்க இயலாமல் போன ஒரு பெண்ணின் ஆதங்கத்தையும், இளம் பருவத்தில் அவளுக்கு நேர்ந்த கொடுமைகளையும் சிறப்பாகப் பதிவு செய்திருப்பதன் மூலம் பெண் சுதந்திரத்திற்கான போராட்டங்களுக்குதோள் கொடுத்திருக்கிறார் நாவலாசிரியர். எந்தவிதமான வறட்சியிலும் துவண்டு போகாமல் தன்னைத் தகவமைத்துக் கொண்டு வாழும் கற்றாழை போன்றதுதான் பெண்களின் நிலை. நாவலில் வரும் மணிமேகலை ‘கற்றாழை’ போன்றவள் என்கிறார் நாவலாசிரியர். தன்னை விட்டுவிட்டு வேறொரு பெண்ணோடு சென்றுவிட்ட கணவனைப் புறக்கணித்து விட்டு வேறோர் ஆணுடன் வாழச் சென்றுவிட்ட செகதாம்பாளை அவளுடைய உறவினர்கள் புறக்கணிக்கிறார்கள். ஆனால் அதே நிலையை உடைய கண்ணகி ஆணாதிக்கத்துக்கு எதிராகப் போராடுகிறாள். பெண்ணின் அவலநிலை, போராடும் தன்மை என பல்வேறு தளங்களில் பயணிக்கிறது இந்த நாவல். நன்றி: தினமணி, 23/3/2015.