கந்தபுராணக் கதைகள்
கந்தபுராணக் கதைகள், கடலங்குடி பப்ளிகேஷன்ஸ், சென்னை, விலை 90ரூ.
சூரபத்மனை வதம் செய்ய முடிவு எடுக்கும் சுப்பிரமணியர், அவனிடம் வீரபாகு தேவரை தூது அனுப்புகிறார். சூரபத்மன் மிகக் கொடியவன். வீரபாகு தேவரை அலட்சியம் செய்கிறான். இறுதியில் சூரபத்மனை சுப்பிரமணியர் கொன்று, அவன் உடலின் ஒரு பகுதியை மயிலாகவும், மற்றொரு பகுதியை வேலாகவும் ஏற்கிறார். இதை சுவைபட எழுதியுள்ளார் ஆசிரியர் குஹப்பிரியன். நன்றி: தினத்தந்தி, 22/10/2014.
—-
வலி தாங்கும் மூங்கில், ஞா. சந்திரன், பாவை வெளியீடு, சென்னை, விலை 70ரூ.
வாழ்க்கையில் மனிதர்கள், நியாயமுடன், அர்ப்பணிப்புடன், தன்னை உயர்வாக எண்ணி, பொறுமை தொலைநோக்கு பார்வையுடன் செயல்பட வேண்டும் என்பதை குட்டிக் கதைகள் படங்களுடன் போதிக்கும் நூல். நன்றி: தினத்தந்தி, 22/10/2014.
—-
கொல்லூர் ஸ்ரீமூகாம்பிகை வரலாறு, சக்கி கே.கிருஷ்ணமூர்த்தி, பத்ம சக்தி நிறுவனம், சென்னை, விலை 50ரூ
கர்நாடகாவில் உடுப்பி மாவட்டத்தில் உள்ள கொல்லூர் ஸ்ரீமூகாம்பிகை திருக்கோவிலின் வரலாறு தெளிவாகவும், சுருக்கமாகவும் தரப்பட்டுள்ளன. தங்கும் இடம், போக்குவரத்து வசதிகள் பற்றிய விவரங்களும் உள்ளன. மூகாம்பிகை பக்தர்களுக்கும் அக்கோவிலுக்கு செல்ல விரும்புபவர்களுக்கும் பயன்படும் நூல். நன்றி: தினத்தந்தி, 27/8/2014.