கந்தர் அந்தாதி

கந்தர் அந்தாதி, அருணகிரிநாதர், மும்பை ராமகிருஷ்ணன், எல்.கே.எம். பப்ளிகேஷன், பக். 544, விலை 290ரூ.

செந்தமிழ் முருகன் கந்தவேலின் புகழ் பாடும் நூல்களும் கந்தர் அந்தாதியும் ஒன்று. மகாபாரத்திற்கு உரை எழுதிய வில்லிப்புத்தூராழ்வாருக்கும், அருட்கவி அருணகிரிக்கும் இடையே ஏற்பட்ட கவிதைப் போட்டியின் விளைவாகப் பாடப்பட்ட நூல் கந்தரந்தாதி. அருணகிரியால் திருச்செந்தூர் செந்திலாண்டவனின் புகழ்பாடும் நூல் கந்தரந்தாதி. கந்தரந்தாதியைப் பாராதே கழுக்குன்ற மலைய நினையாதே என்று ஒரு பழமொழீ உள்ளது. அந்த அளவுக்கு பாடுவதற்கு மிகக் கடினமான நூல். படிப்பதற்கோ நெட்டுருச் செய்வதற்கோ, பொருள் காண்பதற்கோ விரித்துப் பொருள் உரைப்பதற்கோ எளிதில் இயலாதவை. அருணகிரி நூல்களுள் திருப்புகழும், திருவகுப்பும் சந்தப் பாடல்கள், கந்தர் அநுபூதி விருத்தங்கள், வேல், மயில், சேவல் விருத்தப் பாடல்கள், இத்தகைய சிறப்பு வாய்ந்த கந்தர் அந்தாதி நூலிற்கு உரை எழுதியுள்ளார் நூலாசிரியர். ஆன்மிக உலகில் குறிப்பாக, முருகன் புகழ் பாடும் விரிவுரையாளர்களும் இந்நூலாசிரியர் மும்பை ஆர். ராமகிருஷ்ணன் நாடறிந்தவர். பத்து நூல்களுக்கும் மேல் முருகனைப் பற்றியும் ஆதி சங்கரரைப் பற்றியும் எழுதியவர். கடினமான கந்தரந்தாதிக்கு மிக எளிமையாக உரை தந்துள்ளார் உரையாசிரியர். அருணகிரிநாதர் காம வெறியரா? கந்த நெறியரா? என்ற தலைப்பில் வியக்க வைக்கிற வண்ணம் (பக். 63-82) ஓர் ஆய்வுக் கட்டுரை ஆசிரியரது புலமைக்கும், அருணகிரியாரின் நாடித் துடிப்பை நன்கு உணர்கிற பேராண்மைக்கும் ஆசிரியரின் திறனாய்வு நம்மை வியக்க வைக்கிறது. அருணகிரியாரின் ஆர்வலர்களுக்கு இந்நூல் ஓர் அருள்கொடை. -குமரய்யா. நன்றி: தினமலர், 9/3/2014.  

—-

ஜுபிடர் பிக்சர்ஸ், ஜுபிடர் எஸ்.கே. ஹபிபுல்லா, விஜயா பப்ளிகேஷன்ஸ், சென்னை, பக். 192, விலை 150ரூ.

இந்து முஸ்லிம் ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக இருந்தவர்கள் ஜுபிடர் முதலாளிகள். மொஹிதுனும் சோமசுந்தரமும் பல திரைக் காவியங்களைத் தமிழ் கூறும் நல்உலகிற்குத் தந்திருக்கின்றனர். இளங்கோவன் தீட்டிய கண்ணகி பி.எஸ்.ராமையாவின் எழுத்தாக்கத்தில் உருவான குரேப குசேலா, அண்ணா தீட்டிய வேலைக்காரி, மனிதன் போன்ற சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த படங்கள் ஜுபிடரால் தயாரிக்கப்பட்டவையே. ஜுபிடர் கடந்து வந்த பாதை, கரடு முரடானது. தோல்விகளும் துக்கங்களும் நிரம்பியது. இதை எழுச்சி மிக்க நடையில் தருகிறார். ஜுபிடர் எஸ்.கே. ஹபிபுல்லா. -எஸ்.குரு. நன்றி: தினமலர், 9/3/2014.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *