கனடா நாட்குறிப்பு

கனடா நாட்குறிப்பு, சா. கந்தசாமி, கவிதா பப்ளிகேஷன்ஸ், விலை 110ரூ. 60 ஆண்டு காலமாக சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் எழுதிவரும் படைப்பு எழுத்தாளர் சா. கந்தசாமி படைத்த பயணக் கட்டுரை நூல். கனடா நாட்குறிப்பு தனிப்பட்ட வாழ்க்கை என்பதைத் தாண்டி, பொதுவாகவே இருக்கிறது. வேறுநாடு, வேற்று மனிதர்கள் என்பதால் வாழ்க்கை அடியோடு மாறிவிடுவதில்லை. அது எப்போதும் போலவே இருக்கிறது. ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு, தங்கள் மனதில் தோன்றும் கருத்துக்களைச் சொல்லிக்கொண்டு, தாங்கள் எதிர்கொள்ளும் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டு வாழ்கிறார்கள். அதுவே வாழ்க்கை என்பதை சுவாரசியமாக்குகிறது என்பதை தன் பயண அனுபவங்களாக பதிவு செய்திருக்கிறார் நூலாசிரியர் சா. கந்தசாமி. எழுதப்பட்ட பயண நூல் படிக்கப்படுகிறதா என்பது கேள்வியே இல்லை. அது எழுதப்படுகிறது என்பதே வாழ்க்கையாக இருக்கிறது என தன் கனடா நாட்டு பயண அனுபவத்திற்கு ஒரு அர்த்தம் கொடுக்கிறார் ஆசிரியர். நன்றி: தினத்தந்தி, 14/10/2015.  

—-

சாதித்த புண்ணியர், பருத்தியூர் டாக்டர் கே. சந்தான ராமன், எம்.ஏ.ஜெய்ஷங்கர் பதிப்பாசிரியர், கடலங்குடி பப்ளிகேஷன்ஸ் வெளியீடு, விலை 70ரூ.

பிரகலாதன் முதல், ராமானுஜரின் சீடர்கள் வரை 81 வைணவ சாதனைகாயளர்களின் வரலாறு அடங்கிய நூல். நன்றி: தினத்தந்தி, 14/10/2015.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *