கருப்பு காந்தி காமராஜர்

கருப்பு காந்தி காமராஜர், சுவாமிமலை பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை, தியாகராயநகர், சென்னை 17, விலை 40ரூ.

பெருந்தலைவர் காமராஜரின் வாழ்க்கை வரலாற்றை இளைய தலைமுறையினருக்கு ஏற்றபடி அழகாக எழுதியுள்ளார், எழுத்தாளர் மெர்வின்.  

—-

 

யோகா புத்தகம், தஞ்சை சக்தி ரமேஷ்,  3/6, சத்திய மூர்த்தி நகர், நந்தனம், சென்னை 35, விலை 160ரூ.

ஆரோக்கிய வாழ்வுக்கு யோகாசனங்கள் எவ்வளவு அவசியமானவை என்பதை வலியுறுத்தி, ஸ்பெஷல் யோகா என்ற புத்தகத்தை சிறப்பாக எழுதியுள்ளார் தஞ்சை சக்தி ரமேஷ். நன்றி: தினத்தந்தி, 28/11/2012.  

—-

 

மங்கையர்க்கரசி எங்கள் தெய்வம், இராமநாதன், பழனியப்பன், வானதி பதிப்பகம், சென்னை 17, பக். 496, விலை 270ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-867-2.html

பாண்டியன் நின்றசீர் நெடுமாறனின் (கூன் பாண்டியன்) மனைவிதான் மங்கையர்க்கரசியார். அறுபத்துமூன்று நாயன்மார்களுள் ஒன்பது பேர் தொகையடியார்கள். அவர்களுள் மூவர் பெண்கள். அவர்களுள் ஒருவர் மங்கையர்க்கரசியார். பெண்ணாகப் பிறந்து, சேக்கிழாரால் தெய்வ நிலைக்கு உயர்த்தப்பட்ட தெய்வப் பெண்மணி இவர். ஓர் அரசிக்கு இருக்க வேண்டிய அத்தனை தகுதிகளையும் பெற்றவர். அதுமட்டுமல்ல ஓர் அரசியினுடைய பொறுப்புகள் எவையெவை என்பதையும் முற்றிலும் உணர்ந்தவர். ஒரு பெண்களால் எதையும் சாதித்துக் காட்ட முடியும் என்பதையும் நிரூபித்துக் காட்டியவர். சைவ நெறியில் சிறந்திருந்த மங்கையர்க்கரசியார், சமயத்தாலும் ஏனைய குணநலன்களாலும் மாறுபட்டவரான, சமணம் சார்ந்திருந்த நின்றசீர் நெடுமாறனை மணந்து, நடத்திய இல்லற வாழ்க்கை தியாகம் நிறைந்தது. அவ்வரசியின் அள்ப்பரிய தியாகமே நூல் முழுவதிலும் பதிவாகியுள்ளது. பெரியபுராணம் (ஞானசம்பந்தர் புராணம்) திருஞானசம்பந்தர் – திருநாவுக்கரசர் தேவாரத்தில் அரசியாருக்குத் தொடர்புடைய தேவாரப் பதிகங்கள், குலச்சிறை நாயனார் புராணம் ஆகியவற்றிலிருந்து மங்கையர்க்கரசியாரின் மாண்புகள் அனைத்தும் முழுமையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. எல்லா நற்குணங்களும் அமையப் பெற்றிருந்த மங்கையர்க்கரசியார் பற்றிய இந்நூலை இல்லறத்தை நல்லறமாக்க நினைக்கும் பெண்கள் அனைவரும் அவசியம் படிக்க வேண்டும். நன்றி: தினமணி, 19/8/2013.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *