கலாம்மின் திருப்புமுனைகள்

திருப்புமுனைகள், கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தியாகராய நகர், சென்னை 17, விலை 120ரூ.

சாதாரண குடும்பத்தில் பிறந்து, இந்தியாவின் முதல் குடிமகனாக தேர்ந்து எடுக்கப்பட்டு, மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதையும் பெற்று இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திராமாக ஜொலிக்கும் டாக்டர் ஆ.ப.ஜெ. அப்துல்கலாம். ஏற்கனவே அக்னி சிறகுகள் என்ற அற்புதமான படைப்பை கொடுத்து புத்தக உலகில் ஒரு சாதனையை ஏற்படுத்தி இருக்கிறார். இப்போது, அவரது சிறகுகள் மேலும் விரிவடைந்து பறந்ததன் மூலம் உருவாகி இருக்கிறது. திருப்புமுனைகள் என்ற அக்னி சிறகுகள் இரண்டாம் பாகம் புத்தகம். ஜனாதிபதி பதவியின் கடைசி நாள் அனுபவத்துடன் தொடங்கும் இந்த புத்தகத்தில், அவர் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டபோது நடந்தது என்ன? அவர் சந்தித்த 7 முக்கியமான திருப்பங்கள், இந்தியாவை வளமிக்க நாடாக உயர்த்த அவர் தெரிவிக்கும் 10 யோசனைகள், சகாய் 30பேர் விமானத்தில் அதிவேகத்துடன் பறந்த அனுபவம், எப்போதும் பரிசுப்பொருட்களை ஏன் ஏற்றுக்கொள்வது இல்லை என்பதற்கான காரணம், ஏவுகணை அனுபவங்கள், பீகார் சட்டசபை கலைக்கப்பட்டபோது உருவான பிரச்னையால் ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்ய திட்டமிட்டது என்று ஏறாளமான சுவையான தகவல்களை தருகிறார் டாக்டர் அப்துல்கலாம். நாட்டின் வளர்ச்சியில் அக்கறை கொண்ட மாணவர்கள் உள்பட அனைவரும் படித்து பயன்பெற வேண்டிய நல்ல புத்தகம். சிவதர்ஷினியின் மொழிபெயர்ப்பு இயல்பாக இருக்கிறது.  

—-

  தையல் கலை, தையல் கலைஞர் பாப்பி, சஞ்சீவியார் பதிப்பகம், டி1, ஸ்ரீவாரி பிளாட்ஸ், 11, கவரைத்தெரு, மேற்கு சைதாப்பேட்டை, சென்னை 15, விலை 150ரூ.

பெண்களுக்கான சுடிதார், செல்வார், ஜீன்ஸ், ஜாக்கெட், பாடி, பாவாடை போன்ற வகை வகையான ஆடைகளை எவ்வாறு வெட்டி தைக்க வேண்டும் என்ற விவரிக்கப்பட்டுள்ளது. தவிர குழந்தைகளுக்கான ஆடைவகைகள், நவீன ஸ்கர்ட் வகைகள் பற்றி, பெண்களுக்கான உடை அலங்கார குறிப்புகள், துணிகளின் பராமரிப்பு, துணிகள் வாங்குவதற்கான குறிப்புகள் என ஏராளமான தையல் கலை குறிப்புகள் தரப்பட்டுள்ளன. தையல் கலைஞர்களுக்கும் பெண்களுக்கும் பயன்படும் நூல். நன்றி: தினத்தந்தி, 21/11/12.

Leave a Reply

Your email address will not be published.