கலிவரின் பயணங்கள்

கலிவரின் பயணங்கள், ஜோனதன் ஸ்விப்ட், தமிழில் யூமா வாசுகி, என்.சி.பி.ஹெச். வெளியீடு, விலை 260ரூ.  

To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-199-8.html கலிவருக்கு கடல் பயணத்தின் மீது அளவற்ற ஆசை. அவரது ஆசை நிறைவேறும் நேரத்தில், அவர் பயணித்த கப்பல் எதிர்பாராதவிதமாகப் புயலில் சிக்குகிறது. நாலா திசையிலும் நீந்தி பயணிகள் தப்பிக்கப் பார்க்கிறார்கள். கலிவர் தன்னந்தனியாக ஒரு கரையில் ஒதுங்குகிறார். களைப்பு, பசியால் உறங்கிவிடுகிறார். அந்தக் கரை, குள்ள மனிதர்கள் வசிக்கும் லில்லிபுட் என்ற நாட்டின் ஒரு பகுதி. கலிவர் கண்விழித்துப் பார்த்தபோது, அவரைத் தரையோடு பிணைத்து யாரோ கட்டிப் போட்டிருக்கிறார்கள். கட்டை விரல் உயரமே உள்ள குள்ள மனிதர்கள் அம்பு வில்லுடன் சுற்றிலும் நிற்கிறார்கள். பிறகு அவரது நல்ல குணங்களைக் கண்டு, லில்லிபுட் தேசத்தில் வீடு வழங்குகிறார்கள். அரசவையிலும் இடம் தருகிறார்கள். பிளெபஸ்கியூடியன்ஸ் என்ற அருகிலுள்ள தீவு தேசத்தை, லில்லிபுட் தேசம் வெற்றிக்கொள்ளக் கலிவர் உதவுகிறார். ஆனால் புதிய நாட்டை லில்லிபுட் தேசத்தின் ஒரு பகுதியாக மாற்றுவதைக் கலிவர் எதிர்க்க, அவர் தேசத்துரோகம் செய்ததாகவும் சிறுநீர் கழித்து ஊரை வெள்ளக்காடாக மாற்றியதாகவும் குற்றஞ்சாட்டப்படுகிறது. அவரது பார்வையைப் பறிக்க வேண்டும் என்று தண்டனை வழங்கப்படுகிறது. ஒரு நண்பரின் உதவியுடன் பிளெபஸ்கியு தப்பிச்செல்லும் கலிவர், அங்கிருந்து கைவிடப்பட்ட ஒரு படகு மூலம், அந்தப் பகுதியைக் கடந்து செல்லும் கப்பலைப் பிடித்து நாடு திரும்புகிறார். ஆங்கிலோ ஐரிஷ் எழுத்தாளர் ஜோனதன் ஸ்விப்ட் எழுதிய கதை கலிவரின் பயணங்கள் (1726). தமிழில் மொழிபெயர்த்தவர் யூமா. வாசுகி. நன்றி: தி இந்து, 23/4/2014.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *