சிவப்புக் கிளி

சிவப்புக் கிளி, வசுதேந்திரா,  தமிழில் யூமா வாசுகி, பாரதி புத்தகாலயம், சுற்றுச்சூழல் பிரச்சினைகள் நம் அனைவரது வாழ்வையும் நேரடியாகத் தீண்டத் தொடங்கிவிட்ட நிலையிலும், அவற்றைக் குறித்த அடிப்படை உணர்வு அற்றவர்களாகவே பெரும்பாலோர் இருக்கிறோம். இயற்கையையும் நம் வாழ்க்கையையும் எப்படிப்பட்ட அவலமான வகையில் பறிகொடுத்துக்கொண்டிருக்கிறோம் என்பதை அழுத்திச் சொல்லும் கதைகளில் ஒன்று ‘சிவப்புக் கிளி’. நன்றி: தமிழ் இந்து, 5/1/119. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818  

Read more

பேரன்பின் பூக்கள்

பேரன்பின் பூக்கள், சுமங்களா, தமிழில் யூமா வாசுகி, சித்திரச் செவ்வானம், புக்ஸ் ஃபார் சில்ரன்,  விலை 350ரூ. அண்டை மாநிலமான கேரளம் இலக்கியத்திலும் சமூக உணர்விலும் நம்மைவிட மேம்பட்ட நிலையிலேயே பல நேரம் இருந்து வந்திருக்கிறது. அதற்கான அழுத்தமான அடையாளங்களில் ஒன்று மலையாளச் சிறார் இலக்கியம். தற்கால மலையாள மொழியின் சொத்துகளைக் கணக்கெடுத்தால், அதில் சிறார் இலக்கியத்துக்குத் தனி இடம் உண்டு. இதற்குப் பல்வேறு சமூக வரலாற்றுக் காரணங்கள் இருக்கின்றன. தமிழில் கடந்த 15 ஆண்டுகளில் வெளியான நேரடிச் சிறார் இலக்கியத்தைவிடவும், மொழிபெயர்ப்பின்வழி தமிழுக்கு […]

Read more

அழகான அம்மா

அழகான அம்மா, ரஷ்ய சிறார் கதைகள், தமிழில் யூமா வாசுகி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக். 360, விலை 290ரூ. குழந்தைகளின் உலகம் மிக இனிமையானது. சாதாரண விஷயங்களையும் கதையாக சொல்லும் போது, ஈர்க்கும் பருவம் அது. வாழ்க்கையின் புரிதலை, கதை வழியாக கேட்பதால் ஆனந்தமடையும் வயது. அதனால் தான், வீடியோ காட்சிகளாகவும், ஆடியோ பேச்சுகளாகவும் வடிவம் எடுத்துள்ள கதைகளுக்கும் மவுசு குறையவில்லை. ‘டிவி சேனலில்’ ஒளிபரப்பாகும், பொம்மை படங்களின் கதைகள், இந்த தலைமுறை குழந்தைகளை ஈர்க்கின்றன. இருந்தாலும், ‘பாட்டி வடை சுட்ட […]

Read more

என் கதை

என் கதை, சார்லி சாப்ளின், தமிழில் யூமா வாசுகி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலை 190ரூ. ஊமைப்பட காலத்திலேயே உலகப் புகழ் பெற்ற நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளின். மறைந்த பிரதமர் நேரு, ஹிட்லர், சார்லி சாப்ளின் ஆகியோர் ஒரே ஆண்டில் (1889) பிறந்தவர்கள். அமெரிக்கத் திரைப்படக் கல்லூரி 1999-ம் ஆண்டில் நடத்திய கணக்கெடுப்பில், “உலகத் திரைப்பட வரலாற்றில் மிகச் சிறந்த பத்து நடிகர்களில் சார்லி சாப்ளினும் ஒருவர்” என்று தீர்மானிக்கப்பட்டது. “திரைப்படத் துறையில் தோன்றிய உண்மையான மாமேதை சாப்ளின்” என்று பேரறிஞர் […]

Read more

ரோமாபுரி யாத்திரை

ரோமாபுரி யாத்திரை, பாரேம்மாக்கல் கோவர்ணதோர், தமிழில் யூமா வாசுகி, சந்தியா பதிப்பகம், சென்னை, விலை 380ரூ. இந்திய மொழியில் எழுதப்பட்ட முதலாவது பயணநூல் என்று சொல்லப்படுகிறது ரோமாபுரி யாத்திரை. மலையாளத்தில் எழுதப்பட்டதை 18ம் நூற்றாண்டின் நிழலில் நின்று இன்றைய நவீனத்தின் எல்லையைத் தொட்டு, தன் கவித்துவத் தமிழில் மொழி பெயர்த்து இருக்கிறார் யூமா வாசுகி. கிறிஸ்தவ தேவாலயங்கள், நிறுவனங்களுக்குள் இருக்கக்கூடிய அதிகாரப்பூசல்தான் இந்தப் புத்தகத்தின் அடித்தளம். மலங்கரைப் பிரதேசத்துக்குப் பாதிரியாராக தங்களது இனத்தைச் சேர்ந்த ஒருவரே வரவேண்டும் என்ற கோரிக்கையுடன் 1778ல் ஒரு குழு […]

Read more

அடைபட்ட கதவுகளின் முன்னால்

அடைபட்ட கதவுகளின் முன்னால், மலையாளத்தில்-அனுசிரீ, தமிழில்-யூமா. வாசுகி, திருவள்ளுவர் பெரியார் மானுட ஒன்றியம், சோலையார்பேட்டை, விலை 60ரூ. மகனுக்குத் தாலாட்டுப் பாடிய ஒரு தாயின் போர்ப் பாட்டு இது. எல்லாத் தாயும் தன் பிள்ளைகளை சில ஆண்டுகாலம்தான் சுமப்பார்கள். 24 ஆண்டுகளாகச் சிறையில் சுமக்கும் தாய் அற்புதம் அம்மாள். சிறையின் கொடும் தனிமையிலும் எனக்குப் போராடுவதற்கான சக்தி என் அம்மாவிடம் இருந்து கிடைக்கிறது. வெயில் மழையைப் பொருட்படுத்தாது எனக்காக நீதிமன்றத்திலும் சிறையிலும் ஏறி தளரும் போதெல்லாம் ஒருக்கால் தூக்கு மரத்தின் கீழே நிற்க வேண்டி […]

Read more

கலிவரின் பயணங்கள்

கலிவரின் பயணங்கள், ஜோனதன் ஸ்விப்ட், தமிழில் யூமா வாசுகி, என்.சி.பி.ஹெச். வெளியீடு, விலை 260ரூ.   To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-199-8.html கலிவருக்கு கடல் பயணத்தின் மீது அளவற்ற ஆசை. அவரது ஆசை நிறைவேறும் நேரத்தில், அவர் பயணித்த கப்பல் எதிர்பாராதவிதமாகப் புயலில் சிக்குகிறது. நாலா திசையிலும் நீந்தி பயணிகள் தப்பிக்கப் பார்க்கிறார்கள். கலிவர் தன்னந்தனியாக ஒரு கரையில் ஒதுங்குகிறார். களைப்பு, பசியால் உறங்கிவிடுகிறார். அந்தக் கரை, குள்ள மனிதர்கள் வசிக்கும் லில்லிபுட் என்ற நாட்டின் ஒரு பகுதி. கலிவர் […]

Read more

அவரது நினைவுகள்

அவரது நினைவுகள், தகழி சிவசங்கரப் பிள்ளை, தமிழில் யூமா. வாசுகி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 41பி, சிட்கோ இண்டஸ்ரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை 98, பக். 125, விலை 100ரூ. தகழி 1985ல் ஞானபீட விருது பெற்றவர். செம்மீன், ரண்டிடங்கழி, தோட்டியின் மகன் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட நாவல்களை எழுதியுள்ளவர் தகழி. பெரும்பாலான நாவல்கள் மனித வாழ்வின் தீவிரத் துன்பங்களிலிருந்து உருப்பெற்றவை. அந்த வரிசையில் ஓர் இருட்டுலக நிலவெளியை முற்றாகப் பெயர்த்து நம் மன மையத்தில் வைத்து வெளிச்சம் கொடுக்க வைத்த பெரு […]

Read more

மரத்தின் அழைப்பு

மரத்தின் அழைப்பு, மலையாள சிறார் கதைகள், தமிழில்-யூமா வாசுகி, பாரதி புத்தகாலயம், 421, அண்ணா சாலை, தேனாம்பேட்டை, சென்னை 18, விலை 90ரூ. நகர்மயமாதலின் மௌனமான விளைவுகளில் ஒன்று குழந்தைப்பருவம் இழக்கும் உலகம். பெரும்பாலான முந்தைய தலைமுறை கிராமங்களில் வசித்தது. காடுகரைகள் எல்லாம் ஓடித்திரிந்து சிறுவர்கள் மாலைதான் வீட்டுக்கு வருவார்கள். சாப்பாட்டுக்குப் பையனைத் தேடி தாய்மார்கள் தெருக்களில் அலைவார்கள். கிளி பிடித்து, பொன்வண்டு தேடி, தேனடை தேடி, மீன்களைத் துழாவி அலைந்த அந்த சிறுவர்கள் எல்லாம் எங்கே போய்விட்டார்கள்? முந்தைய தலைமுறை அனுபவித்த கட்டற்ற […]

Read more