கவி.கா.மு.ஷெரீப் கவிதைகள்
கவி.கா.மு.ஷெரீப் கவிதைகள், காவ்யா, சென்னை, விலை 600ரூ.
கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர், சினிமா பாடலாசிரியர், பேரூரையாளர் என பன்முகத் திறமை கொண்டவர் கவி.கா.மு.ஷெரீப். அவர் எழுதிய 208 கவிதைகள், ‘மச்சகந்தி’ என்ற குறுங்காவியம், ‘நபியே எங்கள் நாயகமே’ மற்றும் 77 திரைப்பாடல்கள் காண்ட அரும் தொகுப்பு இது. இந்த நூலை ‘காவ்யா’ சண்முக சுந்தரம் தொகுத்துள்ளார். தமிழுக்காவும், தமிழ்நாட்டுக்காகவும் உழைத்தவரும், அரசியல், பத்திரிகை, சினிமா, சீறாப்புராண உரை என பல்வேறு தளங்களில் வெற்றிக்கொடி நாட்டியவருமான கவிஞரின் நூற்றாண்டையொட்டி இந்த நூல் வருவது சிறப்புக்குரியது. நன்றி: தினத்தந்தி, 24/3/2015.
—-
இவர்தாம் பெரியார் (வரலாறு), ஏகம் பதிப்பகம், சென்னை, விலை 70ரூ.
“பிரச்சாரத்தை தொடங்கிய காலத்தில் நான் பட்ட இன்னல்கள் கொஞ்ச நஞ்சமல்ல. கல்லடிபட்டு இருக்கிறேன். செருப்படிபட்டு இருக்கிறேன். மலத்தை முட்டைக்குள் போட்டு என் தலையில் உடைத்திருக்கிறார்கள். ஓடஓட விரட்டப்பட்டிருக்கின்றன. இதற்கு எல்லாம் பயந்திருந்தால் இந்த நிலைக்கு வந்திருக்க முடியுமா?” என்ற பெரியாரின் இயல்பும், பண்பு நலன்களும், இயல்பு நவிற்சியும் குறித்த 223 செய்திகளை தொகுத்து வழங்கியிருக்கிறார் புலவர் மா.நன்னன். நன்றி: தினத்தந்தி, 24/3/2015.