காங்கிரஸ் முதல் கழகங்கள் வரை
காங்கிரஸ் முதல் கழகங்கள் வரை, அந்திமழை, ஜி4, குரு வைஷ்ணவி அப்பார்ட்மென்ட்ஸ், 20, திருவள்ளுவர் நகர் மெயின் ரோடு, கீழ்க்கட்டளை, சென்னை 117, விலை 75ரூ.
தமிழ்நாட்டில் 1967 பொதுத்தேர்தலில், காங்கிரஸை தி.மு.கழகம் தோற்கடித்து ஆட்சியை பிடித்தது. அதன் பிறகு தமிழ்நாட்டில் திராவிட இயக்கங்களின் ஆட்சிதான். தி.மு.கவும், அ.தி.மு.க.வும் மாறி மாறி ஆட்சி நடத்தி வருகின்றன. காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வர முடியவில்லை. இதுபற்றிய விவரங்களை தெளிவாகவும், நடுநிலையுடனும் இந்நூலில் எழுதியுள்ளார். மூத்த பத்திரிகையாளர் ராவ். ஒவ்வொரு தேர்தலிலும் கூட்டணி கட்சிகளிடம் ஏற்பட்ட மாற்றங்களையும் அதனால் ஓட்டு வங்கியில் ஏற்பட்ட மாற்றங்களையும் விவரித்திருக்கிறார். தமிழக அரசியலில் ஆர்வம் கொண்டவர்கள் அவசியம் படிக்க வேண்டிய நூல்.
—-
மங்களேஸ்வரீயம், அல்லூர் வெங்கட்ராமன், ஸ்ரீ ஆனந்த நிலையம், 7, புதூர் முதல் தெரு, அசோக் நகர், சென்னை 83, விலை 360ரூ.
வடமொழியில் வராகமிகிரர் எழுதிய பிரகத் ஜாதகத்தை லிங்கன் என்பவரும் வைத்திலிங்க ஜோதிடர் என்பவரும் தமிழில் மொழி பெயர்த்து மங்களேஸ்வரீயம் என்னும் நூலாக எழுதியுள்ளனர். அந்த நூலுக்கு எளிய தமிழில் அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் விளக்கம் தரப்பட்டுள்ளது.
—-
வைட்டமின்கள் அறிவோம், டாக்டர் வீ. கிருஷ்ணன், சங்கர் பதிப்பகம், 15/21, டீச்சர்ஸ் கில்டு காலனி, 2வது தெரு, ராஜாஜி நகர் விரிவு, வில்லிவாக்கம், சென்னை 49, விலை 30ரூ.
வைட்டமின்கள் எத்தனை வகை உள்ளன. ஒவ்வொரு வகையும் எந்ததெந்த உணவுப் பொருட்களில் உள்ளன. அவற்றின் பயன்கள் என்ன? இச்சத்துக்கள் குறைந்தாலோ அல்லது கூடினாலோ என்னென்ன நோய்கள் உண்டாகும் என்ற விவரங்கள் உள்ளன. நன்றி: தினத்தந்தி, 10/10/2012.