குழந்தைகள் விரும்பும் பள்ளிக்கூடம்
குழந்தைகள் விரும்பும் பள்ளிக்கூடம், கமலா வி. முகுந்தா, தமிழில்-ராஜேந்திரன், கிழக்குப் பதிப்பகம், 57, பி.எம்.ஜி. காம்ப்ளக்ஸ், சௌத் உஸ்மான் ரோடு, தி.நகர், சென்னை 17, பக். 328, விலை 250ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/978-81-8493-801-2.html
பள்ளிக்கூடங்கள் குழந்தைகளை மனப்பாடம் செய்வதற்கு மட்டுமே நிர்பந்திக்கின்றன. இந்த செயலால், குழந்தைகள் பள்ளிக்கூடம் என்றாலே அலறியடித்து ஓடுகிறார்கள். புத்தகச் சுமை, அளவுக்கு அதிகமான வீட்டுப் பாடங்கள், இடைவிடாத தேர்வுகள் என்று அவர்களை மிரட்டுவதுதான் இன்றைய பள்ளிக்கூடங்களின் செயல்பாடாக உள்ளது. இதனால் மனதளவில் குழந்தைகள் பாதிப்புக்குள்ளாகின்றனர். விளையாட்டும் குறும்புமாய் இருக்கும் குந்தைகளை பள்ளிக் கூடங்களின் மேல் ஈடுபாடு கொள்ளச் செய்யும் கற்பிக்கும் முறையே இன்றைய தேவை என்பதை உணர்த்தும் நூல். குழந்தைகள் கல்வியில் ஆர்வமுள்ளவர்களுக்கு பேருதவியாக இருக்கும். நன்றி: குமுதம், 10/7/2013.
—-
நுகர்வோரே நீதிபதி, நீதிபதி ஏ. ரத்தினவேலு, சி. சீதாராமன் அண்டு கோ பி. லிட், 73/37, இராயப்பேட்டை நெடுஞ்சாலை, இராயப்பேட்டை, சென்னை 14, பக். 232, விலை 165ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-156-8.html
நுகர்வோர் பாதுகாப்புக்காகவும் அவர்களின் குறைகளை தீர்ப்பதற்காகவும் சட்டம் இயற்றி, மன்றங்கள் அமைத்து பல ஆண்டுகள் ஆகியும் அதன் பலன் அடித்தட்டு மக்களை சென்று சேரவில்லை என்பதுதான் பலரின் கருத்தாக உள்ளது. அந்த நோக்கத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் எழுதப்பட்ட நூல் இது. நுகர்வோர் பிரச்னைகள், சேவைக் குறைபாடு, வியாபார நடைமுடை உள்ளிட்ட நுகர்வோர் பாதுகாப்பு சட்ட நுணுக்கங்களை எல்லோரும் எளிதாகப் புரிந்து கொள்ளும்விதத்தில் அழகான தமிழில் தெளிவாகத் தந்துள்ளார் நீதிபதி ரத்தினவேலு. பள்ளிகள், கல்லூரிகள், நுகர்வோர் பாதுகாப்பு, உதவிக்குழுக்கள், வழக்கறிஞர்கள், மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் எல்லோருக்கும் இந்நூல் ஒரு வழிகாட்டி. -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 10/7/2013
—-
திருக்குறள் எளியபாட்டில், க. வீரையன், தீபா நூலகம், 55, சத்யகிருஷ்ணா நகர், வெண்ணாற்றங்கரை, தஞ்சாவூர் 613003, விலை 150ரூ.
ஒன்றரை அடி குறளில், உலகையே அளவீடு செய்த நூல் திருக்குறள் என்று சொன்னால் அது மிகையாகாது. என்றைக்கும் ஏற்றுக்கொள்ளும் கருத்துகள் மிகுந்த திருக்குறளுக்கு எளிய பாடல்கள் மூலம் விளக்கம் அளிக்கிறது இந்நூல். நன்றி: தினத்தந்தி, 15/5/2013.