கோபிகிருஷ்ணன் படைப்புகள்
கோபிகிருஷ்ணன் படைப்புகள், கோபிகிருஷ்ணன், நற்றிணை பதிப்பகம், சென்னை 5, பக். 1022, விலை 800ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-808-6.html
மறைந்த கோபிகிருஷ்ணனின் எழுத்துகள் முழுமையாக இந்த தொகுப்பில் கொண்டுவரப்பட்டுள்ளன. கூடவே கோபிகிருஷ்ணனை யூமா. வாசுகி எடுத்த நேர்காணலும். கோபிகிருஷ்ணனின் படைப்புகளில் இருவிதத் தன்மைகளைக் காணலாம். ஒன்று, மொழியைக் கையாளும் விதம். அவருக்கே உண்டான திருகல் மொழித் தன்மை அதாவது மொழியை திருகித்திருகி பயன்படுத்தும் லாவகம் (உ-ம்) வார்த்தை உறவு போன்ற கதைகள். இரண்டு, உரித்துப்போட்டது போன்ற அப்பட்டமான மனவெளியில் பச்சையான அந்தரங்கங்களை கதையின் நேர்த்தி கெடாமல் படைப்பாக்குவது. பச்சையான மொழி, அப்பட்டமான உண்மை, ஆடைகளற்ற உடல்கள், வெளிப்படையான பெண்கள், பூச்சுகளற்ற மனவெளி, போகிறபோக்கில் சறுக்கிச் செல்லும் நையாண்டி, மனப்பிறழ்வு, மனநல மருத்துவர்கள்-இவைதாம் கோபிகிருஷ்ணனின் அகவெளி. இந்த அகவெளிதான் அவரது படைப்புகளின் ஊற்றுக்கண். இந்தத் தொகுப்பின் மிக முக்கிய அம்சம் யூமா. வாசுகியினி நேர்காணல். கோபிகிருஷ்ணனின் மனப் பரப்பைக் காட்டும் ஜன்னல் அது. தமிழ்ப் படைப்புலகில் கோபிகிருஷ்ணனின் இடம் மௌனிக்கு நிகரானது என்பதை உறுதிப்படுத்துகிறது இந்தத் தொகுப்பு. நன்றி: தினமணி, 25/3/13.
—-
இந்தத் தொகுப்பின் பெயர் இதனுள் எங்கோ இருக்கிறது, புதுவைப்பிரபா, கல்பனா பதிப்பகம், 2, முத்துவாழி அம்மன் கோவில் தெரு, பாக்கமுடையான் பட்டு, புதுச்சேரி 8, பக். 112, விலை1 00ரூ.
உழவா? எழவா?வில் நம் விவசாயத்தின் உயிர்நாடி அறுந்துபோன காரணத்தை ஆசிரியர் விளக்குவதில் இருந்தே இந்த மண்ணின்மேல் அவருக்கு இருக்கும் பற்று புரிபடுகிறது. கவிதை வரிகளால் நாட்டில் நடக்கும் சமகால அத்தனை ஏச்சு, பேச்சு, அடக்குமுறை, அநியாயம், அதிகாரம், தீவிரவாதம் என்று ஒன்று விடாமல் அலசுகிறார். எளிய தமிழில், காதலாகட்டும், நட்பாகட்டும், கல்வியாகட்டும், சாதியாகட்டும் நம்புங்கள், நம்மால் நல்லதாய் மாற்றிக்காட்ட முடியும் என்று சத்தியம் செய்கிறார். அதற்கு மக்களை ஓரணியில் திரளச் சொல்கிறார் எல்லாம் கவிதை மனம் கொண்டே. நன்றி: குமுதம், 19/6/13
