சகுந்தலா வந்தாள்
சகுந்தலா வந்தாள், வா.மு.கோமு, வெளியீடு நடுகல் பதிப்பகம், திருப்பூர், விலை 150ரூ.
To buy this Tamil online: https://www.nhm.in/shop/100-00-0002-266-1.html உருக்கும் வாழ்க்கை எழுத்தாளர் வா.மு.கோமு மனதில் பட்டதை பாசாங்கின்றி அப்படியே எழுத்தில் வடித்துவிடக்கூடியவர். அவரது புதிய நாவலான சகுந்தலா வந்தாள் அவரது பாணியிலேயே சுறுசுறுவென்று வந்திருக்கிறது. கல்பனா, ஜான், சகுந்தலா, கமலக்கண்ணன் என்கிற நான்கே நான்கு பாத்திரப்படைப்புகளால் நகரும் இந்நாவல் ஆரம்பத்தில் எங்கு நோக்கிச் செல்லும் கதை இது என்ற பெரிய கேள்வியை ஏற்படுத்துகிறது. கமலக்கண்ணன் கதைக்குள் வந்தபிறகு இக்கதைக்குள் காதலையும் காமத்தையும் தாண்டிய உணர்வுகள் இடம்பெறுகின்றன. சகுந்தலாவுக்கு உதவி செய்யப்போய் இரண்டு குழந்தைகளையும், மனைவியையும் வேலையையும் இழந்து நடுத்தெருவில் எந்த குற்றமும் செய்யாத கமலக்கண்ணன் நிற்கிறான். அப்போதுகூட செருப்பால் தன்னைத்தான் அடித்துக் கொள்ளத்தோன்றுகிறது அவனுக்கு. சபலங்களும் ஆசாபாசங்களும், அச்சமும், சுயஇரக்கமும் கொண்ட சாதாரண மனிதன் அவன். சகுந்தலாவின் பாத்திரமோ பெரும் அச்சத்தை வாசிப்பவர்கள் மனதில் ஏற்படுத்துவது. பெற்ற இரு குழந்தைகளையும் எந்த சலனமும் இன்றி விற்றுவிடும் கோரம். அடிப்படையில் மனிதகுலத்தின் எல்லா செயல்பாடுகளுக்கும் பின்னர் சுயநலமே இருப்பதாகச் சொல்வார்கள். சகுந்தலாவுக்கு அது எக்கச்சக்கமாகத் தூக்கி நிற்கிறது. அவள் மீது பாலியல் ஆசை இருப்பினும் கமலக்கண்ணன் அதை வெளிக்காட்ட முடியாமல் சமூகக் கட்டுப்பாடுகளால் கட்டப்பட்ட ஒரு புழுவாக நிற்கிறான். கல்பனாவின் கதையோ இன்னும் மோசம். தன்னைக் காதலித்த ஜான் முன்னால் பாலியல் தொழிலாளியாக நின்று அவனை சுகப்படுத்தி, பின்னர் தான் ஒருபோதும் அவனைக் காதலித்தது இல்லை என விளக்கி விலகுகிறாள். வாமு கோமுவின் எழுத்தில் கிளுகிளுப்பூட்டும் பாலியல் வர்ணனைகள் வந்துவிழுவது சாதாரணம். ஆனால் அவற்றின் பின்னால் இருப்பது அபலையான பெண்களின் இரக்கத்துக்குரிய வாழ்க்கை. நன்றி: அந்திமழை, 1/10/2014.