ஒளிந்திருப்பது ஒன்றல்ல
ஒளிந்திருப்பது ஒன்றல்ல, ஓஷோ, கண்ணதாசன் பதிப்பகம், சென்னை, விலை 150ரூ.
To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-337-1.html உடலே மர்மம் இன்றைய எந்திர வாழ்வில் சாமானியனுக்கும் சரி, தொழில் சாம்ராஜ்யங்களைத் தாங்கி நிற்கும் கோடீஸ்வரனுக்கும் சரி, யாராக இருந்தாலும் அவர்கள் எதிர்கொள்ளும் முதல் பளு மன அழுத்தம். வயிற்றுக்கான வேலை, குடும்ப அச்சின் சக்கரத்தை முன்நகர்த்துவது, இவற்றைத் தாண்டி சமூகம் சொடுக்கும் சாட்டை அடிகள் போன்ற சவால்களால் இவர்களுக்கு நன்றாக தூக்கம், ஓய்வு கிடைப்பதில்லை. கிடைப்பதெல்லாம் துக்கம்தான். இந்த மன அழுத்ததிலிருந்து தப்பிக்க போதை அல்லது தூக்க மாத்திரைகள் மூலம் ஒளிந்துகொள்ளும் இந்த மனிதர்களுக்கு உண்மையில் கிடைப்பது ஆரோக்கியமற்ற உடல்தான். இதை சமாளிக்க, மனதைக் கட்டுப்படுத்த ஒரே நிரந்தர நிவாரணி தியானம்தான் என்கிறார் ஓஷோ. தியானத்திற்கு ஒதுக்க நேரமோ வாய்ப்போ இருக்கவில்லை என்றால், தினமும் படுக்கைக்குப் போகும் முன்பு அல்லது காலை எழுந்தவுடன் பத்து நிமிடம், இருபது நிமிடங்களில் தியானத்தை ஈடுபடுங்கள். அது நிச்சயம் உங்கள் உடலை தளர வைக்கும், தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்தாது, தீய பழக்கங்களை கைவிட வைக்கும் என மிக எளிமையாக ஓஷோ சொல்கிறார். முக்கியமாக அவர் சொல்வது உங்கள் மனம், உடல் முழுவதும் கண்ணுக்குத் தெரியாமல் கவ்வியிருக்கும் கவசங்களைக் கழட்டுங்கள், மௌனத்தை ரசியுங்கள், மனதை ரசியுங்கள், நன்றாக சிரியுங்கள் என பல்வேறு உபாயங்கள் சொல்கிறார் ஓஷோ. கடவுளை வெளியே தேடாதீர்கள். அது வெளியில் இல்லை. உங்களுக்குத்தான் இருக்கிறது. அதைக் கண்டெடுக்க இடையறாமல் போரிடுங்கள். இந்த விழிப்புணர்வு சட்டென்று உங்களுக்குக் கிடைக்காது. ஆனால் தேடிக் கொண்டே இருந்தால் அது உங்களுக்குள் தோன்றிவிடும் என சொல்கிறார் ஓஷோ. இந்தப் பிரபஞ்சத்தின் மிகப்பெரிய மர்மம் இந்த உடல்தான். இந்த மர்மம் நேசிக்கப்பட்ட வேண்டும் என்று சொல்லும் ஒளிந்திருப்பது ஒன்றல்ல என்ற இந்த நூல் ஓஷோ ஆர்வலர்கள் மட்டுமின்றி அனைவரும் வாசித்தறிய வேண்டியது. நன்றி: அந்திமழை, 1/10/2014.