சக்தி பீடங்கள் 51

சக்தி பீடங்கள் 51, தெள்ளாறு இ. மணி, சங்கர் பதிப்பகம், சென்னை, பக். 328, விலை 225ரூ.

பாரததேசத்தின் வரைபடத்தை உற்று நோக்கினால் அன்னை பராசக்தியின் திருவுருவை நாம் தரிசித்த உணர்வுதோன்றும். அவளே நம் இந்திய தாய். வடகோடியில் காமரூபத்து காமாக்யாதேவி கொலுவிருக்கிறாள் என்றால், தென்குமரியில் கன்னியாகுமரி பகவதி தேவியாகவும் அவளே குடியிருக்கிறாள். புராண வரலாற்றின்படி, பாரதம் முழுக்க 51 சக்தி பீடங்கள் அமைந்திருப்பதாகவும், அவை தேவியின் திருவுடலின் ஒவ்வொரு பாகத்தை அடையாளப்படுத்துவதாகவும் கூறப்படுகிறது. அந்த செய்தியின் ஆதாரமாக தட்சயக்ஞ சம்பவம் அமைந்துள்ளது. அதை விவரிப்பதுடன், காஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சி, காசி விசாலாட்சி, உஜ்ஜயினி மங்கள சண்டி, நேபாளத்து குஹ்யேச்வரி, கல்கத்தா காளி என, பாரதம் முழுக்கப் பரவியிருக்கும், 51 சக்தித் திருத்தல மகிமை மற்றும் வரலாற்றுச் செய்திகளைத் தொகுத்தளிக்கிறது இந்த நூல். -கவுதம நீலாம்பரன். நன்றி: தினமலர், 17/5/2015.  

—-

முன்னுரை, குகஸ்ரீ வாரியார் பதிப்பகம், சென்னை, விலை 73ரூ.

திருமுருக கிருபானந்தவாரியாரி ஏராளமான புத்தகங்களுக்கு முன்னுரை எழுதியுள்ளார். அந்த முன்னுரைகளும் இலக்கியச்சுவை மிகுந்தவை. அத்தகைய முன்னுரைகளை எல்லாம் தொகுத்து புத்தகமாக வெளியிட்டுள்ளார். நன்றி: தினத்தந்தி, 20/5/2015.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *