சாகசப் பறவைகள்
சாகசப் பறவைகள், எஸ்ஸாரெஸ், அம்ருதா பப்ளிகேஷன்ஸ், சென்னை 35, பக். 138, விலை 90ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-918-6.html
தினமலர் சிறுவர் மலரில் வெளிவந்த இந்தக் கதை புத்தகம் உருப்பெற்றிருக்கிறது. சிறுவர்களுக்கான கதை என்றாலும், இதில் சொல்லப்பட்டிருக்கும் விஷயங்கள், பெரும்பாலும் பெரியவர்களுக்குத்தான். ஆவலுடன் சாப்பிடச் செல்பவர்கள், டிரஸ்கோடு என்ற பெயரில் அவமானப்படுத்தும் ஐந்து நட்சத்திர ஓட்டல்கள், வலுக்கட்டாயமாக கிரெடிட் கார்டுகள், அப்பாவிகளிடம் திணித்து, அவர்களை பாடுபடுத்தும் வங்கிகள், போக்குவரத்து விதிகளை மதிக்காமல் பொது ஜனங்களுக்கு துன்பம் விளைவிக்கும் அரசியல் வாதிகளின் வாரிசுகள், இவர்கள் எல்லாம் தேவலோகத்து இரண்டு அண்டரண்டப் பட்சிகள் எப்படிச் சீர்திருத்துகின்றன என்று, சுவாரஸ்யமாக கதையைப் பின்னியிருக்கிறர்ர் ஆசிரியர். -மயிலை சிவா. நன்றி: தினமலர், 17/3/2013
—-
1001 கண்டுபிடிப்புகள், அமராவதி பதிப்பகம், 59, ஆடம்தெரு, மைலாப்பூர், சென்னை 4, விலை 50ரூ.
நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருட்களையும் கண்டுபிடித்தது யார்? அவர் எந்த நாட்டுக்காரர் என்ற விவரத்தை ஒரே வரியில் சுருக்கமாக கொடுத்து இருப்பது பொது அறிவு தேர்வுக்கு பயன் உள்ளதாக இருக்கும். ஒருசில விவரங்கள் திரும்ப திரும்ப வருவதை தவிர்த்து இருக்கலாம் ஆசிரியர் சா. அனந்தகுமார்.
—-
சித்தர் சிந்தனைகள், முனைவர் ச. கீதா, குகன் பதிப்பகம், 5, வி.வி,கே. பில்டிங், வடுவூர் 19, மன்னார்குடி தாலூகா, திருவாரூர் மாவட்டம், விலை 60ரூ.
சித்த மார்க்கம் மிகவும் தொன்மையானது. இந்த சிறப்புக்குரிய சித்தர்கள் உருவாக்கிய மருத்துவம், அதன் மகத்துவங்கள், சித்தர்களின் சிறப்புகள், கோட்பாடுகள் ஆகியவற்றை ஆசிரியர் ஆய்ந்து இந்நூலில் கொண்டு வந்து நிறுத்துகிறார். அதோடு மனிதனின் வாழ்வில் ஒன்றோடு கலந்துவிட்ட மரம், செடி, கொடிகள், மற்ற உயிர் ஜீவன்கள் ஆகியவற்றில் புதைந்து கிடக்கும் பலன்களும் இடம்பெற்றிருப்பது சிறப்பு அம்சமாகும். நன்றி: தினத்தந்தி, 26/9/2012.