சித்தம் சிவம் சாகசம்
சித்தம் சிவம் சாகசம், இந்திரா சவுந்தர்ராஜன், விகடன் பிரசுரம், சென்னை, விலை 160ரூ.
தமிழகத்தில் வாழ்ந்த பல சித்தர்கள் பற்றியும், அவர்கள் நிகழ்த்திக் காட்டிய சித்துக்கள் எந்த அளவு உண்மையானது என்பது பற்றியும் விறுவிறுப்புன வார்த்தைகளால் கொடுத்து இருககிறார் ஆசிரியர். குறிப்பாக போகர், கருவூர் சித்தர், திருமூலர் போன்றவர்களைப் பற்றிய அரிய குறிப்புகள் வியக்க வைக்கின்றன. நன்றி: தினத்தந்தி, 22/10/2014.
—-
இனிமையான என் கிராமத்து கனவுகள், சிவ. வடிவேலு, மணிமேகலைப்பிரசுரம், சென்னை, விலை 55ரூ.
பாமரர்கள், வானம், தேடல் போன்ற 54 தலைப்புகளில் தொகுக்கப்பட்ட கவிதை நூலாகும். இளமையும் முதிர்ச்சியும் கலந்த கலவையாய் கவிதைத் தொகுப்பு காணப்படுகிறது. அனைத்து தரப்பினரும் படித்து மகிழ வேண்டிய கவிதை பெட்டகம். நன்றி: தினத்தந்தி, 22/10/2014.
—-
நோய்க்கால உணவுகள், மருத்துவ பதிப்பகம், சென்னை, விலை 70ரூ.
உடல்நலக்குறைவோடு இருக்கும் நோய்க் காலங்களில் நமக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை சரி செய்யும் வகையில் பொருத்தமான உணவுகளைத் தேர்வு செய்து சாப்பிடுவது அவசியம் என்கிறார் மருத்துவர் எஸ். முத்துச்செல்வக்குமார். நன்றி: தினத்தந்தி, 22/10/2014.