சிந்தனைத் தூண்டில்
சிந்தனைத் தூண்டில், தஞ்சை ராமதாசு, வாசன் பிரதர்ஸ் பப்ளிகேஷன், தஞ்சாவூர், விலை 75ரூ.
மாணவர்களின் எதிர்கால வாழ்வு வளம் பெறவும், மனிதநேயமும் அறிவாற்றலும் மிக்க இளைஞர்களை உருவாக்கிடவும் தூண்டுகோலாய் இருப்பதற்காக எழுதப்பட்ட நூலாகும். ரத்ததானம், கண்தானம் குறித்தும் வலியுறுத்தியிருப்பது நூலுக்கு மேலும் சிறப்பை சேர்க்கிறது. நன்றி:தினத்தந்தி, 7/5/2014.
—-
கிழக்குப் பார்வை, நதி (எ) ப.ரா.ஜீவராஜ், திரைப்பட இயக்குனர், கல்லுப்பிள்ளையார் கோயில் தெரு, கருங்கல்பாளையம், ஈரோடு, விலை 100ரூ.
சமுதாயத்தில் உள்ள பெண்ணியம், சாதி, மத வேறுபாடுகளை களைந்தெடுக்கும் வகையில் எழுதப்பட்ட கவிதைகள் தொகுப்பாகும். இவ்வுலகில் அறிவைத் தவிர வேறு எதற்கும், நாம் அடிமையில்லை என்பதனை அடிமை என்ற தலைப்பில் நூல் ஆசிரியர் நதி (எ) ப.ரா. ஜீவராஜ் அழுத்தமாக கூறி உள்ளார். நன்றி:தினத்தந்தி, 7/5/2014.