சின்ன அரயத்தி
சின்ன அரயத்தி, மலையாள மூலம்-நாராயணன், தமிழில்-குளச்சல் மு. யூசுப், காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி. சாலை, நாகர்கோவில் 629001, பக். 280, விலை 200ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-515-7.html
ஆசிரியரின் (மலையாள மூலம்) முதல் படைப்பான இந்த நாவல் சாகித்ய அகடமி, கேரள சாகித்ய அகடாமி, தோப்பில் ரவிவிருது, அபுதாபி தி விருது என்று ஏகப்பட்ட விருதுகளை பெற்ற ஒன்று. கேரளத்தின் ஆதிவாசிச் சமூகமான மலையரையர்களை குறித்து ஆதிவாசி ஒருவரே எழுதிய நாவல். இடுக்கி மாவட்ட பழங்குடியினரின் பண்பாடு, வாழ்வியல் சூழல், அவர்கள் மீது நிகழ்த்தப்படும் சுரண்டல், நாகரிகம், சமூகம் அவர்களை நடத்தும்விதம் இவற்றைப் படிக்கும்போது இதயம் கனக்கவே செய்யும். இது ஒரு பொழுதுபோக்கு நாவல் அல்ல.
—-
பாண்டியன் மகள், விஷ்வக்கனேசன், நிவேதா புத்தகப் பூங்கா, 6/11, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, வ.உ.சி. நகர், பம்மல், சென்னை 75, பக். 408, விலை 200ரூ.
கல்கி இதழின் பொன்விழா சரித்திர நாவல் போட்டியில் பரிசு பெற்ற நாவல் இதுரு. குலோத்துங்க சோழன், சாளுக்கியர், சேரர், பாண்டியர் ஆகியோரை வென்று வாகை சூடிய வரலாற்றை விவரிக்கும் இந்த நாவலில், பாண்டியன் பகையைத் தவிர்க்க பாண்டிய இளவரசியை மகன் விக்கிரமனுக்கு மணம் முடித்து வைக்கிறான் குலோத்துங்கன். சரித்திர நாவலுக்கு என்றிருக்கும் சகல அம்சங்களிலும் குறை வைக்காது அவற்றை அழகாக கலந்து அருமையான நடையில் நாவலை எழுதியிருக்கிறார். -மயிலை சிவா. நன்றி : தினமலர், 4/12/2011.