சியாங் சிங்

சியாங் சிங், ஜாஃபியா ராயன், தமிழில்-வான்முகிலன், திலகன், அலைகள் வெளியீட்டகம், 4/9, 4வது முதன்மைச் சாலை, யுனைடெட் இந்தியா காலனி, கோடம்பாக்கம், சென்னை 24, விலை 70ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0002-180-1.html

வலிமைகொண்டு போராடுவதால் எதிரிகளின் தோலையும் சதையையும் வேண்டுமானால் தொட்டுவிடலாம். ஆனால் காரணகாரிய விவாதங்கள் மூலமாகவே அவர்களுடைய உள்ளங்களைத் தொட முடியும். நியாயத்தின் அடிப்படையில் தாக்குக. வன்முறை மூலம் தற்காத்துக்கொள்க. ஒவ்வொரு நாளும் அதிகாலை சேவல் கூவும்பொழுதே வாளுடன் ஒரு சிறந்த தளபதியைப் போலத் தயாராக வேண்டும். புரட்சி செய்வத ஒன்றும் குற்றமில்லை. இப்படிப்பட்ட ஓராளமான புரட்சிகர இலக்கணங்களை உருவாக்கியவர் சியாங் சிங். உலகப் பொதுவுடைமை இயக்கவாதிகள் அனைவராலும் உச்சரிக்கப்பட்ட பெயர் இது. புரட்சிகர கீனாவை கட்டி அமைத்த மாவோவின் மனைவி. மாவோ தனது அரசியல் வழி நடப்பவராக சியாங் சிங்கை அடையாளம் காட்டினார். மாவோ இறந்த பின் அவரது கல்லறையில் சியாங் சிங் வைத்த மலர் வளையத்தில் உங்களுடை மாணவரும் தோளோடு தோள் நிற்கும் தோழரிடமிருந்து என்ற வாசகத்தை பொறித்து இருந்தார். அப்படிப்பட்ட சியாங் சிங்கின் புரட்சிகரமான வாழ்க்கை வரலாற்றுப் புத்தகம் இது. சீனாவின் ஷான்டுங் மாகாணத்தில் ஏழை கைவினைஞர் குடும்பத்தில் பிறந்த சியாங் சிங், 1938ம் ஆண்டு மாவோவைத் திருமணம் செய்தார். 1976ல் மாவோ இறந்தார். இடைப்பட்ட 38 வருடக கால மண வாழ்க்கையில் முழுக்கவும் மாவோவுக்கு உறுதுணையாக இருந்தார். விவசாயிகளுடன் கலந்து பழகினார். இளைஞர்களுடன் சேர்ந்து போராடினார். உணவு உற்பத்தி செய்தார். மாவோவின் மனைவி என்று அவர் செயல்படவில்லை. ஒரு தோளில் மண்வெட்டியும் மறுதோளில் துப்பாக்கியுமாக அலைந்தார். புரட்சிக்குப் பின் சீனாவின் கிராமப்புறங்களை மாற்றுவதற்கான முயற்சிகளை எடுத்தார். மாவோ இறப்புக்குப் பிறகுதான் சியாங் சிங்கின் முழுமையான பரிமாணத்தை சீனா பார்த்தது. மாவோ மறைவுக்குப் பின்னால் சீனா திரிபுவாதிகளின் கையில் சிக்கியது. சியாங் சிங் கைது செய்யப்பட்டு 15 ஆண்டுகள் சிறையில் இருந்தார். உங்களிடம் இப்போது அதிகாரம் இருக்கிறது. எனவே மற்றவர்கள் குற்றம் புரிந்தவர்கள் என்று எளிதாகக் குற்றம் சாட்ட முடியும். உங்களது குற்றச்சாட்டுகளுக்கு ஆதரவாகப் போலியான ஆதாரங்களை உருவாக்க முடியும். ஆனால் நீங்கள் சீன மக்களையும் உலகெங்கும் உள்ள மக்களையும் முட்டாளாக்க முடியும் என்று நினைத்தால் நீங்கள் முற்றிலும் தவறாகப் புரிந்து கொண்டுள்ளீர்கள். நான் அல்ல உங்களது சிறுகும்பல்தான் வரலாற்று நீதிமன்றத்தின் விசாரணையில் இருக்கிறீர்கள் என்று அவர் அளித்த வாக்குமூலம் இன்றும் சீன ஆட்சியாளர்களை நோக்கியதாகவே இருக்கிறது. தலைவர் மாவோவின் கடனை அடைப்பதற்கு நான் மகிழ்ச்சியும் கௌரவமும் அடைகிறோன் என்ற வார்த்தை இன்றும் உஷ்ணம் கிளப்பியபடியே இருக்கிறது. -புத்தகன். நன்றி; ஜுனியர் விகடன், 6/10/13.

Leave a Reply

Your email address will not be published.