சிவப்பு நிற மழைக்கோட்டில் ஒரு பெண்
சிவப்பு நிற மழைக்கோட்டில் ஒரு பெண், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, விலை 145ரூ.
மூட நம்பிக்கை மற்றும் மத கலவரங்களினால் ஏற்பட்ட பாதிப்புகளை மையமாக கொண்டு மக்களிடையே பகுத்தறிவு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, உருது இலக்கியவாதி சாதத் ஹசன் மண்ட்டோவின் கதைகளை தமிழில் மொழிபெயர்த்து தந்துள்ளார் உதயசங்கர். சிறப்பாக மொழிபெயர்க்கப்பட்டிருப்பதால், இவை மொழி பெயர்ப்புக் கதைகள் என்பதையே மறந்து விடுகிறோம். நன்றி: தினத்தந்தி.
—-
சீனப்பொருள்கள் இறக்குமதியும் இந்திய சிறுதொழில்களும், ஆ. சண்முகவேலாயுதன், சென்னை, விலை 75ரூ.
இப்போது கடைகளுக்குச் சென்றால், சீனப்பொரள்கள் குவிந்து கிடப்பதைக் காணமுடிகிறது. குறிப்பாக செல்போன்கள், கெடிகாரங்கள், அலங்காரப்பொருள்கள், எலெக்ட்ரானிக் கருவிகள் முதலியவை சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு இங்கு குறைந்த விலைக்கு விற்கப்படுகின்றன. ஏற்றுமதி செய்வதில், உலகத்திலேயே முதல் இடத்தைப் பெற்றுவிட்டது சீனா. சீனாவின் இந்த முன்னேற்றத்துக்குக் காரணம் என்ன? இதனால், இந்தியாவில் சிறு தொழில்கள் எந்த வகையில் பாதிக்கப்படுகின்றன? இந்தப் பிரச்சினையை சமாளிப்பது எப்படி என்பதை எல்லாம் விளக்கியுள்ளார் ஆசிரியர். முக்கியமான பிரச்சினையைப் பற்றி அலசி ஆராய்ந்து, தீர்வுக்கு வழி கூறும் சிறந்த நூல். நன்றி: தினத்தந்தி