சுந்தர காண்டம்
சுந்தர காண்டம், எஸ்.என். பி.ஜெயசிங், ஆனந்த நிலையம், சென்னை, விலை 60ரூ.
ராமபிரானுக்காக சீதாதேவியிடம் அனுமன் தூது சென்ற காண்டத்தின் பெயர் இந்நூலின் தலைப்பாக இடம் பெற்றிருந்தாலும், ராமாயணத்தின் ஆறு காண்டங்களும் இந்த புத்தகத்தில் சுருக்கமாக தரப்பட்டுள்ளது. நன்றி: தினத்தந்தி, 1/7/2015.
—-
அமுதமொழிகளின் அற்புத வரிகள், குந்தவையார் பதிப்பகம், தஞ்சாவூர், விலை 90ரூ.
பயனுள்ள பொன்மொழிகளின் தொகுப்பு நூல் இது. நாமறிந்த வழக்கமான பொன்மொழிகளுடன், நூலாசிரியர் தஞ்சை பா.திருநாவுக்கரசு, திரட்டிச் சேகரித்த ஏராளமான அற்புத வரிகள் நூலுக்கு பெருமை சேர்க்கின்றன. நன்றி: தினத்தந்தி, 1/7/2015.
—-
ஆயுர்தேம், ஏகேஎஸ் புக்ஸ் வேர்ல்ட், சென்னை, விலை 200ரூ.
நோய்கள் தோன்றி மனித குலம் அவதிக்குள்ளாவதைக் கண்ட ரிஷிகளும் முனிவர்களும் தீவிரமாக யோசித்தன் விளைவுதான் ஆயுர்வேத மருத்துவத்தின் தோற்றம். நம்மைச் சுற்றிலும் இயற்கை அளித்துள்ள தாவரங்கள், காய்கள், கனிகள், வேர்கள், விதைகள் எவ்வாறு அற்புதமான மருந்துகளாக பயன்படுகின்றன என்பதை இந்த நூலில் சோழராஜன் தெளிவுபடுத்தியுள்ளார். நன்றி: தினத்தந்தி, 1/7/2015.