சென்னை மாநகர்

சென்னை மாநகர், மா.சு. சம்பந்தன், இந்திய பண்பாட்டு ஆய்வு மையம், மாங்காடு.

சென்னையின் வரலாற்றை, பல்வேறு தகவல்களுடன் விளக்கும் நூல், 1911ம் ஆண்டுக்கும் முன், சென்னைத் தெருக்களில் விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் விளக்குகளே பயன்பாட்டில் இருந்தன. பிறகுதான் மண்ணெண்ணெய் விளக்குகள் வந்தன. 1911ல் நகரில் 6269 மண்ணெண்ணெய் விளக்குகள் இருந்தன. பவுர்ணமிக்கு முதல் நாளும், பவுர்ணமி அன்றும், விளக்கேற்றுவதற்காக விடுமறை விடப்பட்டது. 1942ல் சென்னை முழுக்க மின்விளக்கு மயமானது. பின்பு, தெரு சந்திப்புகளில், மின் கடிகாரங்கள் வைக்கப்பட்டன. ஆனால், பல கடிகாரங்கள் சரியான நேரத்தைக் காட்டவில்லை. இதுபோன்று, படிக்க படிக்க சுவாரசியமான தகவல்கள் நிறைந்த இந்த நூல், கன்னிமாரா நூலகத்தில் படிக்க கிடைக்கிறது. நன்றி: தினமலர், 25/5/2014.  

—-

இராமாயணம், அழகர் நம்பி, கவிதா பப்ளிகேஷன், பக். 480, விலை 200ரூ.

To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-206-3.html இராமாயணம் படிப்பது நம் மனம் நன்கு செம்மையாக இருக்க உதவும் என்பர் பெரியோர். ராமனைப்போல, மக்களும் அடக்கம், அன்பு, பண்பு, துணிவு, வீரம் முதலிய நற்பண்புகளைப் பெற இந்நூல் வழிகாட்டுகிறது எனலாம். ஆதி காவியமாக வால்மீகி அருளிய ராமாயணம், பாரத நாட்டின் இதிகாசங்களில் தலையாயது என்பர். ராமாயணம் படிப்பதும், கேட்பதும் சொர்க்கானுபவம் என்றும் பெரியோர் கூறுவர். இந்நூல் வால்மீகி முனிவரின் வடமொழி ராமாயணத்தை, நல்ல தமிழில் நமக்குப் புரியும் எளிய நடையில் எழுதப்பட்டுள்ளது. இந்நூலில் உள்ள சில செய்திகளை மற்ற ராமாயண நூல்களில் காண இயலாது. எடுத்துக்காட்டாக பரத்வாஜர் ஆசிரமத்தில், பரதன், தன் பரிவாரங்களுடன் பழங்கள், அறுசுவை உணவு வகைகள், அன்னம், இறைச்சி வகைகள் உண்டதாக உள்ள செய்திரயைக் கூறலாம் (பக். 203). நல்ல அச்சும், மணியன் செல்வனின் ஓவியங்களும், நூலிற்குப் பெருமை சேர்க்கின்றன. அனைவரும் படிக்க வேண்டிய நூல். நன்றி: தினமலர், 25/5/2014.

Leave a Reply

Your email address will not be published.