பிக்சல்

பிக்சல், டிஜிட்டல் ஒளிப்பதிவு நூல், சி.ஜெ.ராஜ்குமார், டிஸ்கவரி புக் பேலஸ், சென்னை, பக். 176, விலை 230ரூ.

  To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-210-6.html சிறந்த பல படங்களுக்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய ராஜ்குமாரின் நூல் இது. தமிழில் தொழில்நுட்ப நூல்கள் குறைவு. அதிலும் சினிமா தொழில்நுட்ப நூல்கள் அரிது. அந்த இடைவெளியை நிரப்ப வந்துள்ளது இந்நூல். ஃபிலிம் மேக்கிங்கில் தொழில்நுட்ப புரட்சி ஏற்பட்டதனால் பல புதிய இளைஞர்கள் பிரகாசிக்க முடிகிறது. இந்நூல் அப்படி வெளிவரும் புதிய கேமிராமேன்களுக்கும் விஸ்வபகாம் மாணவர்களுக்கும் ஒரு வரப்பிரசாதம் எனலாம். இந்தியாவுக்குள் நுழைந்த சினிமா க்ளவுட் கம்ப்யூட்டிங் போன்ற அரிதான கண்டுபிடிப்புகளை தொலைநோக்கோடு இந்நூலில் விளக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் சி.ஜே. ராஜ்குமார். டிஜிட்டலில் ஒளிப்பதிவு செய்தல், அதற்கேற்ப ஒளி அமைக்கும் தன்மை, அந்த ஒளியை மாற்றுவது, கட்டுப்படுத்துவது, கேமிராவை எப்படிக் கையாள்வது என்பது மட்டுமின்றி டிஜிட்டல் ஃபிலிம் மேக்கிங்கில் பயன்படுத்தப்படும் ஹார்டுவேர் மற்றும் சாப்ட்வேர் சாதனங்களைப் பற்றியும் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப பதங்கள் பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே எல்லோரும் விளங்கிக் கொள்ளும்வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளன. திரைக்குப் பின் நடக்கும் டிஜிட்டல்(Digital data), படத் தகவல்களைக் கையாள்வது (Data Management), பிலிம் பின்னணி வேலைகள் (Post Production)  பற்றிய சந்தேகங்களை நிவர்த்தி செய்கிறது இந்த பிக்சல். ஒளிப்பதிவு பற்றி மட்டுமல்லாது திரைக்கலையைப் பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வம் உள்ள எல்லோருக்கும் இந்த நூல் உதவும். நன்றி: கல்கி, 26/4/2014.

Leave a Reply

Your email address will not be published.