தமிழர் வரலாறு

தமிழர் வரலாறு, ஸ்ரீசெண்பகா பதிப்பகம், 32பி, கிருஷ்ணா தெரு, பாண்டிபஜார், தியாகராய நகர், சென்னை 17, விலை 250ரூ.

தமிழர்களின் வரலாற்றை நம்முடைய தமிழ் அறிஞர்கள் பலர் விரிவாக ஆய்வு செய்து வெளியிட்டுள்ளனர். இருந்தபோதிலும் பி.டி.சீனிவாச அய்யங்கார் ஆங்கிலத்தில் எழுதிய தமிழர் வரலாறு பல சிறப்புகளைக் கொண்டது. இதை புலவர் கா. கோவிந்தன் மொழிபெயர்த்துள்ளார். கி.பி. 600 வரையிலான தமிழ், தமிழர், தமிழ்நாடு பற்றிய வரலாற்றை விளக்குகின்ற அருமையான நூல். பி.டி.சீனிவாச அய்யங்காரின் சில தவறான முடிவுகளை தக்க சான்றுகளோடு மறுத்து அந்தந்த அதிகாரங்களின் பின் இணைப்பாக சேர்த்திருபப்து இந்நூலுக்கு மேலும் அழகு சேர்க்கிறது.  

—-

 

அதங்கோட்டாசான், வே. செல்லம், தமிழாலயம் பதிப்பகம், சாமிதோப்பு 629704, விலை 70ரூ.

தொல்காப்பியம் அரங்கேற்றத்திற்கு தலைமை தாங்கிய அதங்கோட்டாசானின் சிறப்புகளை கூறும் நூல் இது. வர்மக் கலை என்ற உடற்கூறு கலை பற்றி நூல் முழுவதும் கூறியுள்ளார் ஆசிரியர். மனித உடலில் காணப்படும் வர்மங்கள் படத்துடன் விளக்கி காட்டப்பட்டுள்ளது.  

—-

  தமிழ்ப் புலவர் வரலாறு, அருணா பப்ளிகேஷன்ஸ், 12, முதல் தெரு, வடக்கு ஜெகந்நாத நகர், வில்லிவாக்கம், சென்னை 49, விலை 55ரூ. சங்க காலப் புலவர்கள், இடைக்காலப் புலவர்கள், தற்காலப் புலவர்கள் என்ற தலைப்பில் தமிழ்ப்பிரியன் எழுதிய நூல். பள்ளி மாணவர்களுக்கு பயன்படும். நன்றி: தினத்தந்தி, 16/1/2014.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *