தமிழின் தனிச்சிறப்பு
தமிழின் தனிச்சிறப்பு, முல்லை பதிப்பகம், 323/10, கதிரவன் காலனி, அண்ணாநகர், மேற்கு, சென்னை 40, விலை 15ரூ.
10-4-1949ஆம் ஆண்டு மறைமலையடிகளார் ஆற்றிய சொற்பொழிவு அடங்கிய மிகச்சிறிய நூல்.
—-
மனதெனும் குரங்கை வெல்லுங்கள், தமிழாக்கம்-வெ. ராஜகோபால், ஜெய்கோ பப்ளிஷிங் ஹவுஸ், 48, ஆர்ய கவுடர் ரோடு, மேற்கு மாம்பலம், தி.நகர், சென்னை 33.
போதை ஏறிய குரங்கை தேளொன்று கொட்டி, பிசாகம் பிடித்தால் எப்படி இருக்குமோ அதுபோலவே நம் மணமும். அதிலிருந்து பயன் தராத சிந்தனைகளை செதுக்கி எடுத்து உள்ளே உள்ள கடவுளின் உருவமாகிய மூர்த்தியின் சிறப்பை வெளிக்கொணர்வதே மனதை வெல்லும் வழி என்கிறது நூல். எக்காரணம் கொண்டும் எந்நிலையிலும் செய்ய வேண்டியவற்றை நிறைவேற்றாமலிருக்க சமாதானம் சொல்லாதீர்கள். தன்னம்பிக்கை வேண்டும். குறிக்கோள் வேண்டும். அவற்றைப் படிப்படியாக மேம்படுத்திக் கொள்ளுங்கள். தோல்வியில் துவளாது முயலுங்கள். உயர்வையும், தாழ்வையும் எப்படி நோக்குகிறீர்கள் என்பதிலேயே உங்கள் வெற்றி இருக்கிறது. நீங்கள் சாதனைகள் புரிவீர்கள். உங்களைச் சுற்றி உள்ளவர்களையும் நீங்கள் ஊக்கப்படுத்துவதால் அவர்களும் மேம்படுவார்கள் என்பனவற்றை எல்லாம் விளக்குகிறார் நூலாசிரியர் ஆனந்த் பட்கர். இவர் ஆங்கிலத்தில் படைத்த மாஸ்டர் தி மைண்ட் மங்க்கி என்ற நூலை மனதெனும் குரங்கை வெல்லுங்கள் என்று தமிழில் மொழியாக்கம் செய்திருக்கிறார் வெ. ராஜகோபால். ஆங்கில நூலின் விலை 350ரூ. தமிழ் நூலின் விலை 199ரூ.
—-
வெற்றி பெற்ற விவசாயப் பெண்கள், விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை 2, விலை 90ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-454-4.html
ஆண்களக்கு நிகராகப் பெண்கள் பல்வேறு துறைகளில் ஈடுபட்டு, வெற்றிக்கொடி நாட்டி வரும் காலம் இது. விவசாயத்துறையில் அருஞ்சாதனை புரிந்த பெண்களைப் பற்றிய நூல் இது. மல்பெரி வளர்ப்பில் சாதனை புரிந்து தேசிய அளவில் விருது பெற்ற தமிழ்ச்செல்வி. பட்டுக்கூடு வளர்ப்பில் சாதனை படைத்த பாப்பாத்தி, எலுமிச்சை வளர்ப்பில் வெற்றி பெற்ற ஜெயபாரதி இப்படி சாதனை படைத்த பெண்கள் பற்றி கதைபோல சொல்கிறார் ஜல்லிப்பட்டி பழனிச்சாமி. இதைப் படிக்கும் பெண்கள் விவசாயத்துறையில் ஈடுபட்டு சாதனை படைக்க ஆர்வம் கொள்வார்கள் என்பது நிச்சயம். நன்றி: தினத்தந்தி, 21/8/2013.
