தமிழி
தமிழி, வி.ஆனந்தகுமார், வி. ஆனந்தகுமார் வெளியீடு, விலை 250ரூ.
50 ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்னோக்கி சென்று ஆதிமனிதனான ஆதிபகவன், பிறப்பித்த முதல் சொல் எது என்பதிலிருந்து ஆரம்பித்து குகைகளில் அவன் வைத்த அடையாளக் கோடுகள் பிற்காலத்தில் அவை எழுத்துக்களாக மாறின. இது தொடர்பாக அரிய தகவல்கள் அடங்கிய ஆராய்ச்சி நூலாகும். நன்றி: தினத்தந்தி, 27/1/2016.
—-
தமிழக அரசுப் பணியில் சேருவது எப்படி?, வடகரை செல்வராஜ், ரேவதி பப்ளிகேஷன்ஸ், விலை 250ரூ.
அரசுப் பணியில் சேர விரும்புவோருக்கு சிறந்த வழிகாட்டி இந்நூல். அரசு தேர்வு எழுதுவதற்கான விதிமுறைகள், தகுதிகள், நிபந்தனைகள் முதலிய அனைத்து விவரங்களும் உள்ளன. நன்றி: தினத்தந்தி, 27/1/2016.