தமிழ்நாட்டில் காந்தி
தமிழ்நாட்டில் காந்தி, அ. ராமசாமி, விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை 2, விலை 425ரூ.
To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-198-9.html மகாத்மா காந்தி தென் ஆப்பிரிக்காவில் போராட்டத்தை தொடங்கியபோது அவருக்கு உறுதுணையாக இருந்தவர்களில் பலர் தமிழர்களே. இதன் தாக்கத்தால் தமிழர்கள் மீதும், தமிழ் மீதும் மகாத்மா கொண்டு இருந்த அளப்பரிய பாசத்தால் அவர், 1896 முதல் 1946 வரை 20 முறை தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதன் அனைத்து நிகழ்வுகளையும் ஒரு நொடி பிசகாமல் இந்த நூலில் பதிவு செய்து இருப்பது வியக்க வைக்கிறது. நாமும் மகாத்மா கூடவே பயணிப்பதுபோன்ற மெய்சிலிர்க்கும் அனுபவத்தைக் கொடுக்கிறது. மகாத்மா என்ற அடைமொழியை சென்னை கூட்டம் முதல்முதலாக அவருக்கு வழங்கியது எப்படி? அரை நிர்வாண துறவி கோலத்தை அவர் மதுரையில் ஏற்றது எவ்வாறு என்பது உள்பட உள்ளத்தைத் தொடும் ஏராளமான அற்புத தகவல்களால் இந்த நூல் அரிய பொக்கிஷமாக திகழ்கிறது. நன்றி: தினத்தந்தி, 5/3/2014..
—-
வாலி எழுதிய எனக்குள் எம்.ஜி.ஆர், குமரன் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை 17, விலை 250ரூ.
எம்.ஜி.ஆருக்கு வாலி எழுதியப் பாட்டெல்லாம் கதாநாயகனுக்காக இல்லாமல் எம்.ஜி.ஆருக்காகவே எழுதப்பட்ட பாடலாகவே இருக்கும். தவிர, எம்.ஜி.ஆரின் எண்ணத்திற்கிணங்க, விருப்பத்திற்கினங்க வாலி எழுதிய பாட்டெல்லாம் மிகவும் பிரபலமானவை. நான் அரசனென்றால் என் ஆட்சி என்றால் என்ற வரிகள் நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால் என்று மாறியதாக வாலி கூறுகிறார். அதேபோல் மேடையில் முழங்கு அறிஞர் அண்ணாபோல் என்பது திரு.வி.க.போல் என்றும் மாறியதாம். எம்.ஜி.ஆரிடம் இருந்த நெருக்கம், அவரிடம் கற்ற பாடங்கள், அவர் வாலியிடம் கோபித்துக் கொண்ட நிகழ்ச்சிகள் என பல அனுபவங்களை வாலி எழுதியுள்ளார். சத்தியபாமாவிற்கு மகன். ஆனால் சாதாரண மக்களுக்கு அவர் மகான் என்றும், பாம்பே இல்லாமல் எல்லாம் ஏணிகளாகவே அமைந்த பரமபதம் மாதிரி அவர் எம்.ஜி.ஆரின் படங்களுக்கு பாட்டு எழுதி உயர்ந்ததை குறிப்பிடுகிறார். இன்னும் எம்.ஜி.ஆரைப் பற்றி எழுதியிருக்கலாம் என்று கூறும் அளவிற்கு அழகிய தமிழில் எழுதப்பட்ட அற்புதமான நூல். நன்றி: தினத்தந்தி, 5/3/2014..