தமிழ் இலக்கணம்

தமிழ் இலக்கணம், பேராசிரியர்கள் வி.மரிய அந்தோணி, க. திருமாறன், ஸ்ரீ செண்பகா பதிப்பகம், கிருஷ்ணா தெரு, தி.நகர், சென்னை 17, விலை 55ரூ.

தமிழ் இலக்கண விதிகள் எளிய நடையில் சான்றுகளோடு விளக்கியிருப்பதோடு பேச்சு வழக்கில் உள்ள ஏராளமான பிழையான சொற்களும் தரப்பட்டுள்ளன. தமிழ் மாணவர்களும் தமிழை பிழையின்றி பேச, எழுத நினைப்போருக்கும் உகந்த நூல். நன்றி:தினத்தந்தி, 10/7/2013.  

—-

  நகைச்சுவைச் சக்கரவர்த்தி ஜே.பி. சந்திரபாபு, எஸ்.டி.வி., விக்டோரியா பதிப்பகம், சென்னை, பக். 408, விலை 300ரூ.

திரை உலகினரே மறந்துவிட்ட மாபெரும் கலைஞரான சந்திரபாபுவின் வாழ்வை நம் கண்முன் நிறுத்தும் நூல். சந்திரபாபுவின் சினிமா வரலாறு. அவர் நடித்த திரைப்படங்கள், அவற்றின் அரிய புகைப்படங்கள், அவர் பாடிய பாடல்களின் தொகுப்புகள், அவரது உழைப்பு, சினிமாவைத் தாண்டிய அவரது நிஜ வாழ்க்கை என்று பல சுவாரஸ்யங்கள் நிறைந்த நூல். இன்னும் அவரைப் பற்றிய பல பொக்கிஷங்களை நூல் முழுவதும் நிறைத்தத் தந்திருக்கிறார் எஸ்.டி.வி. சந்திரபாபுவின் வாழ்க்கையைப் பற்றிய கட்டுரைகளுக்கு அவர் நடித்த படங்களின் பெயர்களே தலைப்பாக கொடுத்திருப்பது படிக்கப் படிக்க சுவாரஸ்யம். நன்றி: குமுதம், 26/2/2014.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *