தமிழ் இலக்கணம்

தமிழ் இலக்கணம், சு.தங்கவேலு, பூங்கொடி பதிப்பகம், பக்.296, விலை ரூ.200. தொல்காப்பியம்தான் தொன்மையான முதல் இலக்கண நூலாகத் திகழ்கிறது. எம்மொழி இலக்கணத்திற்கும் இல்லாத தனிச்சிறப்பு தொல்காப்பிய பொருளதிகாரத்திற்கு மட்டுமே உண்டு. எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் ஆகிய முப்பெரும் அதிகாரங்களைக் கொண்டது தொல்காப்பியம். இந்நூலிலும் முப்பெரும் அதிகாரங்கள் உள்ளன. எழுத்திலக்கணத்தில், எழுத்துகள் உருவாக்கம், எண்ணிக்கை, மொழிக்கு முதலில் வரும் எழுத்துகள், மாத்திரை, போலி முதலியவற்றைக் கூறும் எழுத்தியல் பற்றியும்; பகுபதம், பகாபதம் போன்ற பகுபத உறுப்புகள், உறுப்பிலக்கணம் போன்றவற்றைக் கூறும் பதவியல் பற்றியும்; எழுத்துப் புணர்ச்சி […]

Read more

அகத்தியர் முதல் ஆதித்தனார் வரை

அகத்தியர் முதல் ஆதித்தனார் வரை, காவ்யா, சென்னை, விலை 480ரூ. பழைய ஒன்றுபட்ட நெல்லை மாவட்டத்தின் சிறப்புகளை இந்த நூலில் ஓய்வு பெற்ற ஆங்கிலப் பேராசிரியர் எழிலமுதன் தொகுத்து வழங்கியுள்ளார். இயல், இசை, நாடகம், அறிவியல், ஆய்வு என ஐந்து தமிழுக்கும் நெல்லைத் தமிழ் தலைமை தாங்குகிறது. கவிதைக்குப் பாரதி, கதைக்குப் புதுமைப்பித்தன், நாடகத்துக்குச் சுந்தரம் பிள்ளை, அறிவியலுக்கு அப்புசாமி, சு. முத்து, ஆய்வியலுக்கு தி.க. சிவசங்கரன், தொ.மு. சி. ரகுநாதன் இப்படி நீள்கிறது, பட்டியல். ஜனநாயகத்திற்கேற்ப இதழியலை ஜனரஞ்சகமாக்கியவர் ஆதித்தனார். பாமரரென்று ஒதுங்கிக்கிடந்த […]

Read more

தமிழ் இலக்கணம்

தமிழ் இலக்கணம், பேராசிரியர்கள் வி.மரிய அந்தோணி, க. திருமாறன், ஸ்ரீ செண்பகா பதிப்பகம், கிருஷ்ணா தெரு, தி.நகர், சென்னை 17, விலை 55ரூ. தமிழ் இலக்கண விதிகள் எளிய நடையில் சான்றுகளோடு விளக்கியிருப்பதோடு பேச்சு வழக்கில் உள்ள ஏராளமான பிழையான சொற்களும் தரப்பட்டுள்ளன. தமிழ் மாணவர்களும் தமிழை பிழையின்றி பேச, எழுத நினைப்போருக்கும் உகந்த நூல். நன்றி:தினத்தந்தி, 10/7/2013.   —-   நகைச்சுவைச் சக்கரவர்த்தி ஜே.பி. சந்திரபாபு, எஸ்.டி.வி., விக்டோரியா பதிப்பகம், சென்னை, பக். 408, விலை 300ரூ. திரை உலகினரே மறந்துவிட்ட […]

Read more