தியானமும் பயிற்சியும்

தியானமும் பயிற்சியும், சுவாமி ராமா, தமிழில் புவனா பாலு, கண்ணதாசன் பதிப்பகம், சென்னை 17, பக். 154, விலை 100ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-917-8.html

மேலை நாடுகளில் யோகா, தியானம் மற்றும் கீழை நாடுகளில் சிந்தனைகளைக் குறித்த தற்கால எழுத்தாளர்கள், மேதைகளின் கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு இந்நூல். தியான முறைகளின் குறிக்கோள் மற்றம் யோக ஞானத்தை அடையும் வழிமுறைகளைப் பற்றிய அனைத்தையும் உள்ளடக்கி, எளிமையான விரிவுரைகள் இந்நூலில் உள்ளன. மனிதன் தனது அகம் மற்றும் புறம் என்னும் இரு உலகிலும் வாழும் குடிமகனாகிறான். தியானமே ஒருவருக்குத் தனக்குள் இருக்கும் அகத்தை உணர வழிகாட்டும். தியானம் மதச் சார்பற்றது. அது எந்த மதத்தையும் ஏற்பதுமில்லை. நிராகரிப்பதுமில்லை. மனதை உறுதிப்படுத்தி, சலனமின்றி உள் ஒளியைக் காணச் செய்யும் உள்ளார்ந்த வழிமுறைதான் தியானமாகும். தியானத்தில் முதிர்ந்த அனுபவம் பெற்றவர்கள் மட்டுமே புற உலகிலிருந்து கிடைக்கப் பெறும் தங்கம், செல்வம், பகட்டான வாழக்கை, ஆனந்தம், பாதுகாப்பு உணர்வு இவற்றையெல்லாம் விட தமது அகத்தில் புதைந்திருக்கும் பொக்கிஷமே சிறந்தது என்று உணர்ந்துகொள்கிறார்கள் என இந்நூலின் கட்டுரைகள் குறிப்பிடுகின்றன. ஃபில் நியூர்ன்பெர்கர், ருடால்ஃப் எம், பாலன்டைன் ஆகியோரின் கட்டுரைகள் குறிப்பிடத்தக்கவை. தியானம், தியான முறைகளைப் பற்றித் தெரிந்துகொள்ள விரும்புபவர்களுக்குப் பயன்படும் சிறந்த நூல். நன்றி: தினமணி,26/8/2013.    

—-

 

உலகப் பேரறிஞர்களின் பொன்மொழிகள், வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 17, விலை 30ரூ.

மகாவீரர், புத்தரிலிருந்து அமெரிக்கத் தத்துவமேதை எமர்சன் வரையில், உலகளாவிய தன்மையில் பொன்மொழிகளை 54 தலைப்புகளில் தொகுத்தளித்துள்ளார் வானதி திருநாவுக்கரசு. படிக்கின்றவர்களுக்கு இதமளித்து தெளிவு ஏற்படுத்தக்கூடிய சக்தி படைத்தவையாக இப்பொன்மொழித் தொகுப்பு அமைந்துள்ளது. நன்றி: தினத்தந்தி, 28/11/2012,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *