திராவிட இயக்கம் – புனைவும் உண்மையும்

திராவிட இயக்கம் – புனைவும் உண்மையும், மலர்மன்னன், கிழக்கு பதிப்பகம், பக். 200, ரூ. 135. To buy this Tamil book online – www.nhm.in/shop/978-81-8493-743-5.html

தமிழகத்தின் போக்கை மாற்றி திராவிட அரசியலில் பங்கு மிகப் பெரிது. ஆனால் நாம் அனைவரும் நம்பும் திராவிட இயக்கம் என்ற ஒன்று என்றாவது இருந்ததுண்டா? இந்தக் கேள்வியுடன், ’அப்படி எந்த ஒரு இயக்கமும் இருந்ததில்லை’ என்ற பதிலுடன் தான் இந்த நூலையே ஆரம்பிக்கிரார், நூலாசிரியர். உண்மையில் ‘திராவிட’ என்ற வார்த்தையே சமஸ்கிருத வார்த்தை என்பதையும், அது எவ்வாறு அரசியல்வாதிகளின் கருவியானது என்பதையும் நூலாசிரியர் விளக்குகிறார். இதில் தமிழறிஞாராகப் போற்றப்படும் கால்டுவெல்லின் பங்கு என்ன என்பதையும் தெளிவுபடுத்துகிறார். ‘ திராவிட’ என்ற சொல் அரசியல்மயமாவதற்கு வித்திட்ட அயோத்திதாசர் (திராவிட ஜனசபை), எம். சி. ராஜா (ஆதிதிராவிடன்), நடேச முதலியார் (சென்னை திராவிட சங்கம்) போன்ற மறைக்கப்பட்ட பலரைப் பற்றிய சுவையான தகவல்கள் இந்நூலில் உள்ளன. பிராமணரல்லாதோர் இயக்கம் எவ்வாறு தென்னிந்திய நல உரிமைச் சங்கமாக மாறியது? அது எவ்வாறு ஜஸ்டிஸ் கட்சியாகப் பெயர் மாற்றம் பெற்றது? ஜஸ்டிஸ் கட்சித் தலைவராக ஈ.வெ. ராமசாமி எப்போது உருவானார்? ஜஸ்டிஸ் கட்சியை திராவிடர் கழகம் எவ்வாறு விழுங்கியது? உண்மையிலேயே திராவிட இயக்கம் உள்ளதா? இருந்தால் அதன் வயது 100 தானா?  இவ்வாறு பல கேள்விகளை எழுப்பி இந்நூலில் சரித்திரச் சான்றுகளுடன் பதில் அளித்திருக்கிறார் நூலாசிரியர். திராவிட இயக்கம் என்ற சொல்லாட்சியே ஒரு மோசடியான புனைவு, தமிழகத்தில் இருப்பது திராவிட அரசியல் மட்டுமே என்று முடிக்கிறார்.  

 

மொழியியல் ஆய்வு வரலாறு , ச.அகத்தியலிங்கம் பங்களிப்புகள்,ப.திருஞானசம்பந்தம், இளவெனில் பதிப்பகம், 101.விக்ரம்திரையரங்கு, திருசெங்கோடு சாலை, பள்ளிப்பாளையம், நாமக்கல் மாவட்டம் – 638006.

இருபதாம் நூற்றாண்டு மொழியியல் அறிஞர்களுள் குறிப்பிடத்தக்கவர் ச. அகத்தியலிங்கம். அவரது நூல்கள், கட்டுரைகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு மொழியிடல் அடிப்படையில் அவர் சங்க இலக்கிய இலக்கண ஆராய்ச்சிகள் குறித்த ஆய்வு நூல் இது. மொழியின் செறிவு, செழுமை, நுட்பம் ஆகியவை குறித்து ஆய்வு செய்வது மொழியியல் நோக்கிலான இலக்கண ஆய்வுசெய்வது மொழியியல். அகத்தியலிங்கத்தின் ஆய்வுகளை மொழியியல் நோக்கிலான இலக்கண ஆய்வு, செவ்வியல் தகைமைகள் குறித்த ஆய்வு. விளிச் சொற்கள் ஆய்வு என்று வகைப்படுத்தி இந்நூல் விளக்குகிறது. காப்பியத் திணை , எண், பால் பகுப்புகளுக்கு அடிப்படையாகப் பதிலிடு பெயர்கள், முரந்தொடை குறித்த புதிய பாகுபாடு, தொல்காப்பியச் சொல்லதிகாரம் வேற்றுமைக்கு அளித்துள்ள இடம் குறித்த அவரது ஆய்வு, விளித்தொடரின் தனிச்சிறப்பு, விளித்தொடர் குறித்து அவர் கொடுத்த புதிய வகைப்பாடு, தமிழின் செவ்வியல் தகைமைக்கு அவர் அளிக்கும் வரையறை, அதன் மூலம் அவர் சங்க இலக்கியங்களின் செவ்வியல் தகைமையை நிறுவும் விதம் ஆகியவை குறித்து மிக விரிவாக ஆய்வு செய்து எழுதியுள்ளார் நூலாசிரியர். தமிழ் மொழியியல் துறையில் அகத்தியலிங்கம் ஆற்றிய பெரும் பங்கை பற்றி மட்டுமின்றி அத்துறையை பற்றி மேலதிகமாகத் தெரிந்து கொள்ள உதவும் சிறந்ததொரு ஆய்வு நூல்.   நன்றி: தினமணி (1.4.2013).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *