தொல்காப்பியர் வழியில் நாட்டுப்புலவியல்
தொல்காப்பியர் வழியில் நாட்டுப்புலவியல், பேராசிரியர் குரு. சண்முகநாதன், சங்கீதா, சி. 69, ஒன்பதாம் குறுக்குத்தெரு, அரசு அலுவலர் குடியிருப்பு, திருநெல்வேலி-627007, விலை 120ரூ.
நாட்டுப்புறப்பாடல் என்ற சொல் சரியானதுதானா என்ற வினாவுடன் தொடங்கி அதற்கு, தொல்காப்பியர் வழியில் விடை காணும் முயற்சியாக, ஒரு ஆய்வு நூலாக வெளியாகி இருக்கிறது. வழக்கில் உள்ள ஏராளமான நாட்டுப்புற பாடல்களையும், அவை எந்த சூழ்நிலையில் உருவானவை, அவற்றின் தன்மை மற்றும் இயல்பு என்ன என்பதையும், புலவர்கள் மட்டும் இன்றி அனைவரும் படித்தறியும் வகையில் தந்து இருப்பது சிறப்பு. நன்றி: தினத்தந்தி, 12/9/12.
—-
மறைக்கப்பட்ட ஜோதிட ரகசியங்கள், ஜான் பி. நாயகம், ராம்பிரசாத் பப்ளிகேஷன்ஸ், 106/4, ஜானிஜான்கான் சாலை, ராயப்பேட்டை, சென்னை 14, விலை 150ரூ.
ஜோதிடக்கலை இந்தியாவில் தோன்றியது என்றும், இந்தியருக்கே உரிய பரம்பரைச் சொத்து என்றும் ஒரு தவறான கருத்து நிலவுகிறது. ஆனால் அது கிரேக்க நாட்டில் இருந்துதான் வந்தது என்று கூறும் ஆசிரியர், அதற்கு பல்வேறு சரித்திரச் சான்றுகளை அள்ளி வீசுகிறார். ஜோதிடத்தில் நுழைக்கப்பட்ட மூட நம்பிக்கைகள், கடவுள் கொள்கைகள், அதன் எழுச்சி, வீழ்ச்சி என்று அதில் மறைக்கப்பட்ட ஏராளமான ஜோதிட ரகசியங்களை ஆதாரங்களுடன் கூறுகிறார். ஜோதிடம் சுமார் கி.மு. 4000ல் பாபிலோனியாவில் தோன்றி எந்த எந்த நாட்டில் எல்லாம் பரவியது. அது பரவும்போது ஏற்பட்ட பிரச்சினைகள் என்னென்ன? வளர்ந்து வந்த ஜோதிடம் எப்போது தடைப்பட்டது என்றெல்லாம் விளக்குகிறார். மொத்தத்தில் ஏராளமான சான்றுகள் கொண்ட ஒரு சிறந்த ஆய்வு நூல். நன்றி: தினத்தந்தி, 19/9/12.