தோட்டக்காட்டீ
தோட்டக்காட்டீ, இலங்கையின் இன்னொருமுகம், இரா. வினோத், அறம் பதிப்பகம், பெங்களூர்.
தோட்டத்துக் கவிதைகள் தோட்டக்காட்டீ இலங்கையின் இன்னொரு முகம் என்கிற இரா. வினோத் எழுதியிருக்கும் கவிதைத் தொகுப்பு நூல். இலங்கையின் மலையகத்தில் வசிக்கும் மக்களின் கதையை, அவர்களின் கண்ணீரை, அவல வாழ்வைச் சொல்கிறது. தமிழகத்திலிருந்து புலம் பெயர்ந்து சென்ற ஏழைமக்கள், அடிதட்டு மக்கள் உலகின் பலநாடுகளில் தேயிலை, கரும்புத்தோட்டங்களில் அடிமைகளாக சிக்குண்டு பல தலைமுறைகள் கழிந்துவிட்டன. இலங்கையில் வாழ்ந்த தோட்டத் தொழிலாளர்களை இலங்கையராகவும் எண்ணாமல் இந்தியராகவும் எண்ணாமல் நாடற்றவர்களாகக் கருதும் காலமும் இருந்தது. அரசியல் புயலில் அவர்கள் அடித்துச் செல்லப்பட்ட நிகழ்வும் உண்டு. அம்மக்களின் வறுமையான நிலையை இன்னும் தொடரும் ஆதரவற்ற நிலையை இயம்பும் கவிதைகள் இவை. பட்டினி நிலா தினந்தினம் பிள்ளைகளுக்குச் சோறூட்டச் சொல்லி அழுது அடம்பிடிக்கும் லயத்தில் பால்நிலா. வடகிழக்கில் வானம் இடி இடித்தால் லயத்தில் குண்டர்மழை பொழிந்து கண்ணீரில் மிதக்கும் தோட்டம் -போன்ற கவிதைகள் நிறைந்துள்ளன. நன்றி: 1/3/2014, அந்திமழை.