நரேந்திரமோடி

நரேந்திரமோடி, எஸ்பி. சொக்கலிங்கம், சிக்ஸ்த் சென்ஸ், 10/2, போலீஸ் குவாட்டர்ஸ் சாலை, தியாகராயநகர், சென்னை 17, விலை 125ரூ.

To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-200-6.html நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் பரபரப்பு கதாநாயகனாக வலம் வரும் நரேந்திர மோடியின் இளமைக்காலம்முதல், தற்போது மிரட்டிக்கொண்டு இருக்கும் பிரச்சினைகள் வரை அனைத்தையும் அலசி ஆராயும் தகவல் பெட்டகமாக இந்த நூல் திகழ்கிறது. அவரது ஆரம்பகால ஆர்.எஸ்.எஸ். தொடர்பு, நெருக்கடி காலத்தில் அவரது செயல்பாடுகள், குஜராத் முதல் மந்திரியாக அவர் ஆற்றிய பணிகள், குஜராத் கலவரம், என்கவுண்டர்கள் உள்பட அவர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், ஆகிய அனைத்தும் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. சரியான நேரத்தில், சரியாக வந்திருக்கும் சரியான நூல். நன்றி: தினத்தந்தி, 19/3/2014  

—-

கழிப்பறைக்குள் சென்றிருக்கிறார் கடவுள், மு. முருகேஷ், அகநி வெளியீடு, 3, பாடசாலை வீதி, அம்மையப்பட்டு, வந்தவாசி, பக். 104, விலை 60ரூ.

யாரோ ஒருவராலேயே இந்த வாழ்க்கை கவனப்படுகிறது என்ற மு.முருகேஷின் ஆரம்பமே. நம்மில் அந்த ஒருவரைத் தேட வைக்கிறது. சமூக மாற்றத்திற்கான வித்தாய் இந்தக் கவிதைகள் மாற வேண்டும் என்ற கவிஞரின் எண்ணம் பல கவிதைகளில் ஈடேறியுள்ளது. வாசகனை கைப்பிடித்து இந்தக் காடறிய விலங்காகு, கவிதைகளை அறிய கவிஞனாகு என்று ஒரு மாற்றத்திற்கான யதார்த்தத்தை துளிர்க்க வைக்கிறார். அதனால்தான் சாமியை இவரால் கழிப்பறைக்குள்ளும் அடக்கி வைக்க முடிகிறது. -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 26/3/2014.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *