நலவாழ்வின் படிகள் நான்கு
நலவாழ்வின் படிகள் நான்கு (நான்கு நூல்கள்), பேராசிரியர் எம். ராமலிங்கம், விஜயா பதிப்பகம், பக். 264, 152. 232, 264, விலை ரூ. 170, 95, 145, 170.
உணவு, உடல், உள்ளம், வாழ்க்கை என, மொத்தம் நான்கு நூல்கள். உணவு- உணவின் அவசியம், பகுதிப் பொருட்கள், உணவில் குற்றமும், உண்பவர் குற்றமும் என, பயனுள்ள கருத்துகளை உள்ளடக்கியது இந்த நூல். உடல்-உடற்பயிற்சி, தூக்கம், ஆகாயம், சூரியன், காற்று, நீர், உணவும், உபவாசமும், மவுனத்தின் மாண்பு ஆகியவை இந்த நூலில் விளக்கப்பட்டுள்ளன. உள்ளம்- ஏற்றத்திற்குப் படிகளாக, அட்டாங்க யோகத்தை விளக்கி மனவெழுச்சியின் இயல்புகள் விளக்கப்பட்டு, ஐந்தடுக்கு தவப்பயிற்சியும் மேற்கோள்களுடன் கூறப்பட்டுள்ளது. மகிழ்ச்சி எனும் உணவு, உடலுக்கு எவ்விதம் மலர்ச்சியையும், நலனையும் தருகிறது என்பதும் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. வாழ்க்கை – வாழ்க்கை என்பது, எச்சரிக்கையுடன் மேற்கொள்ளப்பட வேண்டிய பயணம். ஒவ்வொரு நாளும், மேலும் சிறந்த மனிதனாக மாறுவதற்கு முயற்சி செய்துகொண்டேயிருக்க வேண்டும் (பக். 12) எனும் சாக்ரடீஸ் கருத்து முதல், ஏராளமான சான்றோரின் மேற்கோள்களும் இந்த நூலில் எடுத்தாளப்பட்டுள்ளன. -பின்னலூரான். நன்றி: தினமலர், 13/3/2016.