நாம் இந்தியர்கள்! பெருமிதம் கொள்வோம்!

நாம் இந்தியர்கள்! பெருமிதம் கொள்வோம்!, தொகுப்பாசிரியர்: ப. இலட்சுமணன், மாதவ் பப்ளிகேஷன்ஸ், டி-3, வசந்தம் அபார்ட்மென்ட், 1/338, சபரி சாலை, மடிப்பாக்கம், சென்னை – 91. விலை ரூ. 60  

உலகின் பழம் பெருமை மிக்க நாடுகளில் இந்தியா முன்னோடியானது என்பதற்கு உரிய ஆதாரபூர்வமான தகவல்கள் சுருக்கமாகவும், சுவையாகவும் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. பல நாடுகளில் மக்கள் காட்டுமிராண்டிகளாக வாழ்ந்தபோது, இந்தியா சிறப்பான கலாசாரம், பண்பாடு கொண்ட மக்களாக மட்டுமல்லாமல், அறிவியல், அரசியல், ஆன்மீகம், இலக்கியம், தத்துவம், மருத்துவம், கல்வி, பொறியியல், வானவியல், கட்டடவியல்… என்று அனைத்துத் துறைகளிலும் முதன்மை நாடாக விளங்கியதை, வெளிநாட்டு அறிஞர்களே வியந்துரைத்த புகழுரைகள் நூற்றுக் கணக்கில் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. தவிர, பாரதத்தின் பெருமையைப் பறைசாற்றும் ஆய்வுக் கட்டுரைகள், இந்தோனேஷியாவில் இன்றும் கடைப்பிடிக்கப்படும் இந்தியக் கலாசாரம், இயேசு கிறிஸ்து இந்தியாவில் வசித்தார் என்பதற்கான ஆதாரம், ஹிந்து சமயம் குறித்து ஒரு கண்ணோட்டம்… இப்படி நமது தேசம் பற்றி பெருமிதம் கொள்ளக்கூடிய பல செய்திகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. – பரக்கத் நன்றி: துக்ளக் 05-12-12          

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *