நாம் தமிழர்கள் தலை நிமிர்வோம்

நாம் தமிழர்கள் தலை நிமிர்வோம், மாதவ் பதிப்பகம், சென்னை, விலை 120ரூ.

தமிழ் ஆதிமொழி என்று சுவாமி விவேகானந்தரும், திருக்குறளே என் வழிகாட்டி என்று ரஷ்ய அறிஞர் லியோ டால்ஸ்டாயும், யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற கனியன் பூங்குன்றனாரின் தமிழ் வாசகம் ஐ.நா.சபையின் முகப்பிலும்… இப்படி மாற்றாரும் மதித்துப் போற்றும் பெருமைகளைக் கொண்டது தமிழ். ஆனால் தமிழும் ஆங்கிலமும் கலந்து தமிங்கிலம் பேசும் இன்றைய தலைமுறையினருக்கு தமிழின் சிறப்புகள் சிறிதும் தெரியவில்லை என்று ஆதங்கப்படும் இந்நூலாசிரியர், அவற்றை இந்நூலில் உரிய ஆதாரங்களுடன் பட்டியலிட்டுள்ளார். நாம் தமிழர்கள் என்ற முதல் கட்டுரையிலேயே தமிழகத்தின் பூகோள அமைப்பு, ஆதிமனிதனாக தமிழன் தோன்றியது, 50 ஆயிரம் வருடங்களுக்கு முன்பே தமிழ் மொழியின் தோற்றம், தமிழனால் உலகில் தோன்றிய முதல் மருத்துவமான சித்த மருத்துவம். இப்படி பல சிறப்புகள் பட்டியலிடப்படுகிறது. அதேபோல் அமெரிக்காவின் மேலை நாகரிகத்திற்கும், தமிழர் நாகரிகத்திற்கும் உள்ள தொடர்பு, பழந்தமிழர்களின் கடற்பயண மேலாண்மை, பிரமிப்பூட்டும் பழந்தமிழக விஞ்ஞானம், தமிழர்களின் வானியல் மேலாண்மை, பழந்தமிழனின் நானோ தொழில்நுட்பம், கட்டிட தொழில்நுட்பம், தமிழ் மாமன்னர்களின் சாதனைகள், நவீனகால தமிழர் நிலை… என்று தமிழின் பெருமைகளைக் கூறும் 50க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளது சிறப்பானது. -பரக்கத். நன்றி: துக்ளக், 16/9/2015.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *